1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் திருமகள் கிருஷ்ணமூர்த்தி
05 JAN 1940 - 07 JUL 2019
திரு கிருஷ்ணமூர்த்தி இரத்தினசிங்கம்
03 FEB 1935 - 11 NOV 2019
Thirumakal Krishnamoorthy
Krishnamoorthy Ratnasingam
Malaysia, Nallur, Karainagar, Toronto - Canada, Karainagar Mapanavuri, Montreal - Canada
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கிருஷ்ணமூர்த்தி இரத்தினசிங்கம்:-

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், காரைநகர், நல்லூர், கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி இரத்தினசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திருமகள் கிருஷ்ணமூர்த்தி:-

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். காரைநகர், நல்லூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமகள் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

பாசமிகு தந்தையே
பார் புகழ் போற்ற பக்குவமாய்
எங்களை வளர்த்த கிருஸ்ணமூர்த்தி பண்பாளனே
எமது நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவரே

எங்கள் உயிர் மூச்சாய்
எம்மோடு வாழ்ந்திருந்த அப்பா
எமையெல்லாம் விட்டு
அம்மா அருகில் சென்றீரோ!

வரமாக எமக்கு கிடைத்த பெற்றோரே
உண்மை அன்பை எமக்களித்தீர்
அறங்கள் பல புரிந்தீர்
இறை பக்தனாய் வாழ்ந்தீர்
எல்லாமாய் எந்நாளும்
எமக்கிருந்த அப்பாவே
அம்மாவுடன் சென்றுவிட்டீர்

எங்களின் இதய தெய்வமே,
எம் நினைவிலும் கனவிலும் வாழ்பவரே
எமை விட்டு நீர் இறைவனடி சென்றாலும்
எம் ஒவ்வொருவர் உள்ளங்களிலும் இல்லங்களிலும்
இறைவனாய் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்
அப்பாவாக கிருஸ்ணமூர்த்தியாக

அன்பான அப்பா
உங்கள் நினைவலைகள்
எங்களை தினமும் வாட்டி வதைக்கின்றன
ஆனால் இன்று நீங்கள்
எங்களோடு இல்லாத நாளை
சோகத்தோடு கழிக்கிறோம்

ஒவ்வொறு நாளும்
ஒவ்வொரு கணமும்
ஒவ்வொரு நொடியும்
நீங்கள் எங்கள் நினைவுகளை
விட்டு அகலவில்லை

உங்களது அன்புக்கும்
உங்கள் அமைதிக்கும்
உங்கள் பணிவுக்கும்
உங்கள் மரியாதைக்கும்
உங்கள் பெருமைக்கும்
என்றென்றும் உங்கள் பிள்ளைகள்
நாங்கள் தலை வணங்குகிறோம்…

எத்தனை பிறப்பு எடுத்தாலும்
நாங்கள் உங்கள் பிள்ளைகளாகவே
பிறக்க எங்களுக்கு கடைசி வரம்
ஒன்று கொடுங்கள் அப்பா…..

நிம்மதியின்றி தவிக்கும் அம்மாவை இழந்த
பிள்ளைகளின் இதயத்தின் இதயக்குமுறல்
அழவேண்டாம் என்று சொல்லகூட
அம்மா இல்லன்னு...
உணரும்போது தான்
அழுகை கொஞ்சம் அதிகமாக வருகிறது

அம்மா திருமகளே உங்களை மாதிரி யாரும் இல்லை
மனசில் உள்ள கவலைகளை சொல்லி
அழ தோள்கள் இல்லை திருமகளே
உங்களை நினைக்கும் ஒவ்வொரு நொடியும்
எங்களை நாங்களே மறக்கிறோம்

சிறு குழந்தை போல்
உங்களை நேசித்தோம்
இறுதியில் சிறு குழந்தை போல்
எங்களை அழவைத்து தவிக்க விட்டு விட்டு
தனியே சென்று விட்டாயே அம்மா

தனிமை உறவுகளை நினைவுப்படுத்தினாலும்
உறவுகள் தனிமையை நினைவுப்படுத்தினாலும்
ஏனோ மிஞ்சுவது வேதனை தான்
அம்மா அப்பா இருவரையும் இழந்து
ஒரு வருட நினைவு அஞ்சலிகள்

என்றும் எப்பொழுதும் உங்கள் நினைவுகளுடன்
அன்பு பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள், உற்றார்கள், உறவினர்கள், நண்பர்கள்.

ஈழத்து சிதம்பர சௌந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வர பெருமான்
நல்லூர் கந்தன், வரசித்தி விநாயகர் அருள்வேண்டி பிரார்த்திக்கிறோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி சாயிராம்!!! 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos