நினைவஞ்சலி
அமரர் செல்லையா நடராசா
19 JUN 1926 - 21 APR 2010
அமரர் நடராசா மங்கயற்கரசி (மங்கை)
19 APR 1937 - 11 OCT 2019
Sellaiah Nadarajah
Nadarajah Mangayatkarasi
Pungudutivu 3rd Ward, France, Paris - France
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

செல்லையா நடராசா:-
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா நடராசா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி. 

பாசமிகு தந்தையே
பார் புகழ் போற்ற பக்குவமாய்
எமை வளர்த்த பண்பாளனே
நேசத்தின் இருப்பிடமே
எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவரே

எங்கள் உயிர் மூச்சாய்
எம்மோடு வாழ்ந்திருந்த ஐயாவே
எமையெல்லாம் விட்டு
இறைவன் அருகில் சென்றீரோ!

வரமாக எமக்கு கிடைத்த ஐயாவே
வளமாக எமைக் காத்த ராஜாவே
உமை வருத்தி எமைச் சுமந்தீர்
உண்மை அன்பை எமக்களித்தீர்

அறங்கள் பல புரிந்தீர்
இறை பக்தனாய் வாழ்ந்தீர்
எல்லாமாய் எந்நாளும்
எமக்கிருந்த ஐயாவே
இல்லாமல் பத்தாண்டு
எங்கே நீர் சென்றுவிட்டீர்

எங்களின் இதய தெய்வமே,
எம் நினைவிலும் கனவிலும் வாழ்பவரே
எமை விட்டு நீர் இறைவனடி சென்றாலும்
எம் ஒவ்வொருவர் உள்ளங்களிலும் இல்லங்களிலும்
இறைவனாய் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்.

நடராசா மங்கயற்கரசி:-
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா மங்கயற்கரசி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா என்ற சொல்லின் சூட்சுமம் நீ
குடும்பத் தலைவியாய் எங்களை வழிகாட்டியாய்
நீ இருந்தாய் அம்மா!
நாங்கள் எங்கே எப்படி வாழ்ந்தாலும்- நீயே
என் வாழ்வின் ஒளி விளக்கு!

பண்ணிய பாவமென்ன உங்களைப்
பறி கொடுத்துத் தவிக்கின்றோம்
பிரிவு என்னும் தண்டனையால்
நிதமும் நிம்மதி இழந்து துடிக்கின்றோம்

நீங்கள் வர மாட்டீர்கள் எனத் தெரிந்தும்
சுமக்கின்றோம், சுமப்போம் உங்கள் நினைவுகளை
எம் இதயப் பெட்டகத்தில்
அடுத்த ஜென்மம் ஒன்று உண்டெனில் நீங்கள்
எம்முடன் இணைந்திட வேண்டுகின்றோம்

காலங்கள் உருண்டோடினாலும் எம்
எண்ண அலைகள் என்றென்றும் எதிரொலிக்கும்
உங்கள் நினைவுகளுடன்..

உங்களின் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!!!


தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos