9ம், 10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வேலுப்பிள்ளை பூபாலசிங்கம்
05 FEB 1933 - 30 JUN 2011
அமரர் பூபாலசிங்கம் பாக்கியம்
04 JUN 1935 - 16 AUG 2010
Velluppillai Poopalasingam
Poopalasingam Packiyam
Mathagal West, Mathagal
Tribute 0 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை பூபாலசிங்கம்(காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபன முன்னாள் உத்தியோகத்தர்) அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: அபரபக்க சதுர்த்தசி (19-06-2020)

உங்கள் இருவரையும் தேடி ஊர் உலகம் தேடி
நாயாய் அலைகின்றோம் எப்போ கிடைப்பீர்கள்?
யாரைக் கேட்கிறது எங்கே ஆறுவோம்?

அம்மாவின் பிரிவுத்துயர் தாழாமல்
அவரோடு நீங்களும் சென்றது ஏன் தொடர்ந்து?
உங்கள் திருமண தினத்தன்று
அக்கினியில் நீங்கள் செய்து கொண்ட
சத்தியம் தான் காரணமோ?

வேதனைகள் வேர் வரை சென்றாலும்
விழுதுகளாய் எம்மைத் தாங்கினீர்கள்!
உங்கள் இருவரின் குரல் கேட்காமல்
பரிதவிக்கும் எங்கள் குமுறல்கள்
உங்கள் காதுகளில் கேட்கிறதா?

ஊர் விட்டு வந்து நம் சொந்த ஊருக்கு
திரும்ப முடியாமல் தவித்த தவிப்பும்
இப்போ ஊருக்கு போகு நிலை வந்தும்
போவதற்கு நீங்கள் இல்லையே அப்பா.... 

உயரங்கள் நாம் காண எம்
வாழ்க்கைப் பயணத்தில் துணையாய் இருந்த
ஈரிரண்டு கண்களையும் கண்கெட்ட
எமனுக்கோ பொறுக்கவில்லை

நாட்கள் வாரமாகி வாரங்கள் மாதமாகி
மாதங்கள் ஆண்டாகி போனாலும்
ஆறவில்லை எங்கள் துயர்
உங்கள் வார்த்தைகள் எம்மை வாழவைக்கும்
உங்கள் நினைவுகள்  எம்மை வாழ்த்திடும்....
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!


யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பூபாலசிங்கம் பாக்கியம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.


திதி: பூர்பக்க அட்டமி (27-07-2020)

அம்மா நீ சென்ற கணமும்
அம்மா நீ சொன்ன வார்த்தைகளும்
அம்மா நீ செய்த உன்னதங்களும்
அம்மா நீ தந்த நெறிகளும்
எம் நெஞ்சினில் என்றும் அழியாதம்மா
எழுகின்ற கேள்விகளுக்கெல்லாம்

நாளும் விடை தேடுகின்றோம் அம்மா
எங்கள் வலிகளைத் தாங்கயாருமே இல்லையம்மா
அப்பா, அம்மா இல்லாத
அனாதைகள் ஆனோம் அம்மா
அந்த இறைவனே கண்ணீரைப் பரிசாகத் தந்து
மௌனம் காணுகின்றார் அம்மா

அன்பு அம்மாவே!
கொடிய நோய் வடிவில் காலன்
கொன்றுவிட்டானே உம்மை
அன்று மாலைவரை நீ புரிந்த அன்பு மழை
இன்னும் எம் கண்முன்னே வந்து செல்லுதம்மா...

நாடு கடந்து வந்து நாம் உம்மை கண்டு
நாளும் பொழுதும் மகிழ்ந்து இருந்த கணங்களும்
மருமகளையும், பேரப்பிள்ளைகளையும்
நீ கொஞ்சி குழாவிய தருணங்களும்
என்றும் உம்மை நினைவூட்டுகின்றது அம்மா.....

நீங்கள் எனக்காக கட்டிய வீடு
இன்று பாலைவனமாய் கிடக்கின்றது
நீங்கள் இன்று இருந்திருந்தால்
நீங்களாவது அந்த வீட்டில் இருந்திருப்பீர்களே அம்மா....
உயிரை தந்து உடலில் சுமந்து
உலகில் வாழ உருவம் தந்த
தெய்வம் நீயம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்...
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
அன்பு - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos