Born 26 OCT 1930
Died 09 SEP 2019
Mrs Arunachalam Valliammai
Age 88
Arunachalam Valliammai 1930 - 2019 Karainagar Idaippiddi Sri Lanka

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும், படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த காரைநகர் இடைப்பிட்டியில்  26/OCT/1930 இல் திரு.திருமதி கணபதிப்பிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளான வள்ளியம்மை அவர்கள் நல்லதம்பி, சண்முகம், பொன்னம்மா, சிவகாமன், இராசம்மா, பொன்னம்பலம், பேரம்பலம், விசாலாட்சி எனும் உடன்பிறப்புடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.                            

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து  வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி வேலுப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அழகிய ஆண் அழகான அருணாசலம் அவர்களைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக தனபாக்கியம், யோகேஸ்வரன், சேனாதிராசன், வரதராசன், சந்திராதேவி, தவராசன், சீதாலக்ஷ்மி, லிங்கேஸ்வரன், தனலக்ஷ்மி போன்ற பிள்ளைகளைப் பெற்று வளர்த்து, நாகேந்திரம், சுந்தராம்பாள், சற்குணமலர், பராசக்தி, சுந்தரலிங்கம், விமலாதேவி, ஜெயபாலசிங்கம், கிருஷ்ணமூர்த்தி, தர்சினி போன்றோரை திருமணம் முடித்து வைத்து, அழகும் அறிவும் நிறைந்த பேரப்பிள்ளைகளுடனும், பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                           

மேலும்  எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், பழைய கதைகள் சொல்வதில் வல்லவராகவும், அன்பு பாசம் நிறைந்து காணப்படும் அழகிய உறவாக விளங்கியதுடன். அமைதியும்  சாந்தமும்  கருணையும் கொண்டு வாழ்ந்தார்.                                           இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த  இவர் 09.09.2019 இல் 88 வயதில் வவுனியாவில் உள்ள கூமாங்குளத்தில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.   

”காரைநகர் மண்ணின் கரு விழியே
பாறை போல் வலிய மனமே
நிறைந்த மனம் கொண்டு
உதவிகள் புரிந்து
மறைந்தீரே எமைவிட்டு
மறக்காமனதுடன் தவிக்கிறோம் அம்மா”