Born 22 DEC 1937
Died 08 SEP 2019
Mrs Nagamma Yogar
ஆசிரியை- ஏழாலை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை
Age 81
Nagamma Yogar 1937 - 2019 Kuppilan Sri Lanka
Tribute
Rest in Peace
Birth
22
DEC
1937
Death
08
SEP
2019
Nagamma Yogar
ஆசிரியை- ஏழாலை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை
குப்பிளானை பிறப்பிடமாகவும்,கனடா ரொரன்ரோவை(toronto)
வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா-யோகர்(ஆசிரியர்) அவர்களுக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள்!

இந்துமா கடல் சூழ்ந்த இலங்கை மணி திரு நாட்டில்
முத்தமிழில் மூழ்கி முத்தெடுத்த குப்பிழான் பதி உதித்த
மாமகளே!நாகம்மா!அன்பாக மொழி பேசி,அமைதியாய்
அரவணைத்து பக்குவமாய் அறிவூட்டி வளர்த்தெடுத்த
பிள்ளைகள் நாம் தேடுகின்றோம் உன் நினைப்பை எம் நினைவில்
வளருகின்ற பயிர்களுக்கு நீர் விட்டு உரம் விட்டு வளர்பதுபோல்
எமக்கு அறிவோடு,வாழும் வழி காட்டி வளர்திட்ட எம் தாயே!
இனி எங்காண்போம் உன் திரு முகமே!
போய் வா!என சொல்லி பிரிவதற்கு மனமின்றி துடிக்கின்றோம்
நாம் இங்கு!விதி செய்யும் சதி என்று மனதுக்குள் அழுகின்றோம்!
உங்கள் பிரிவாலே வாடுகின்ற உறவுகளின் துயரினிலே கலங்கி
தவிக்கிறோம்"கலங்காது வாழ்"என்று கடைசிவரை சொல்லிவிட்டு
எம்மை கலங்க வைத்து எங்கு சென்றாய் எம் தாயே!
வீரபத்திரரின் அடிசேர்ந்து அமைதி கொண்டு உறங்கிடவே!
வாழும் வரை போற்றுகிறோம்!!
ஓம் சாந்தி!ஓம் சாந்தி!!ஓம் சாந்தி!!!
Write Tribute