- No recent search...

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Bergen op zoom ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணர் நடராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனாலும் அழியவில்லை எம் சோகம்!
மாதங்கள் பன்னிரண்டு என்ன
யுகங்கள் பதினெட்டு ஆனாலும்
மாறாது எம் துயர் மறையாது உங்கள் நினைவு!
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்ட எம் தந்தையே!
கண் நிறைந்த நீரோடு உம் கனவு சுமந்த நெஞ்சோடு
இரத்த கண்ணீர் வடித்து தேடுகின்றோம் எங்கு சென்றாய்!
மனைவி மனம் பரிதவிக்க பிள்ளைகள் சோர்ந்து நிற்க
உற்ற உறவும் உறைந்து நிற்க எம்மை மறந்து
எங்கே போனாய் இவ்வுலகம் மறந்து எங்கள் குலதெய்வமே!
இவ்வளவு சோகம் கண்டும் சென்றாயோ சிவலோகம்!
எங்கள் ஆசை அப்பாவே எங்கு சென்றீர்கள்!
அன்பான எங்கள் அன்பு அப்பா!
இறைவனிடம் நீங்கள் சென்று
ஓராண்டு ஆகியதுவோ...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
உங்கள் பிரிவால் துயருறும்
புஸ்பராதா(மனைவி), சுபாஜினி தர்மபாலன்(மகள்), தர்சினி மகேந்திரராஜா(ம௧ள்),லோஜினி சுதாகரன்(ம௧ள்), திலீபன்(மகன்), சாந்தன்(பெறாமகன்)