Born 10 MAR 1964
Died 18 JUN 2019
Mr Kanthappu Varatharaja (ராதா)
Age 55
Kanthappu Varatharaja 1964 - 2019 Puloly South Sri Lanka

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த புலோலி தெற்கில்   10/MAR/1964 இல் திரு.திருமதி கந்தப்பு சிவக்கொழுந்து தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக திரு.வரதராஜா  அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில்   மழலையாக அவதரித்தார்.                                         

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் பத்மலோசனி, சாந்தினி, கமலாசனி, மன்னவன், மங்களேஸ்வரி போன்ற உடன்பிறப்புகளுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு திருமதி சிவராஜா பாலசரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகள் பாமினி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து  சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக துவாரகா, சங்கீதா, கல்பனா போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சியாகவும்  வாழ்ந்து வந்தார்.                                             

மேலும் ராதா என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இவர் தன்னலமற்ற சமூக சேவையாளரும்,எல்லோர் நெஞ்சங்களிலும் அழியாத அன்பை விதைத்தவர். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும்  பொறுமைசாலியும் நிறைந்தவராக  விளங்கினார். இவ்வாறு மனைவி மற்றும் பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 18.06.2019 இல் 55 வயதில் பிரான்ஸ்ஸில்  இறையடி எய்தினார், அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

புலோலி தந்த புது மலரே
பல காலம் பாசமாக உறவாடி
நிலையாக வாழ்ந்த நிஜ உறவே
வலையில் வீழ்ந்த மீன் போல் 
மனம் துடிக்க பிரிந்தது ஏனோ