Born 04 JUL 1935
Died 09 SEP 2019
Mrs Theivanaipillai Muthu
Age 84
Theivanaipillai Muthu 1935 - 2019 Alvay West Sri Lanka

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும், வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், நீண்டு வளர்ந்த பனை மரமும், மரக்கறித் தோட்டம், பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த அல்வாய் மேற்கில்   04/JUL/1935 இல் கந்தையா சின்னப்பிள்ளையின் அன்பு கொண்ட மகளாய் தெய்வானைப்பிள்ளை அவர்கள் நாகம்மா, கணவதிப்பிள்ளை, அன்னப்பிள்ளை, ஐயாதுரை, தங்கராசா, பறுவதம் எனும் உடன்பிறப்புடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.                            

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் முத்து எனும் அன்புள்ளம் கொண்டவரை திருமணம் முடித்து சந்தோஷமாக  வாழ்ந்ததன் பயனாக சிவசுப்பிரமணியம், சிவசோதி, விக்கினேஸ்வரன், நவரத்தினம், செல்வராணி, சீவரத்தினம், சாவித்திரி, சரஸ்வதி, கணேஸ்வரன் எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து றஞ்சனிதேவி, பாக்கியலக்ஸ்மி, மங்களலக்ஸ்மி, சிவனேஸ்வரி, வரதராசன், ஆனந்தராசா, ரவிச்சந்திரன், ஜெயகௌரி, நந்தகுமாரி போன்றவர்களைத் திருமணம் முடித்து வைத்து, கிரிஸ்தோவ், தேவன், அருண், விமலசங்கர், எலிசபெத், நிரூபன், சபித்தா, அனித்தா, விமேசன், சுகிதா, டாட்சன், சோஸ்திரா, துஷாரா, சாருஷா போன்ற பேரப்பிள்ளைகளுடனும், மகீல்னா, மயில்யா, லயம், நேகாஸ்ரீ எனும் பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                              

மேலும் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறிமைசாலியும் நிறைந்தவராக  விளங்கினார்.                                                

இவ்வாறு  பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த  இவர் 09.09.2019 இல் 84 வயதில் மலேசியாவில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.     

“சிரித்திடும் பூவே சிகரச் சிலையே
விரித்திடும் பறவையே வீழ்ந்திடா உறுதியே
எரித்தீரே பார்வையால் எதிரியைமரித்தீரே
இப்போ மனங்களில் நிலைத்தீரே”