10ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 27 MAR 1981
ஆண்டவன் அடியில் 16 JAN 2010
அமரர் விஜயானந்தன் கஜீபன் (தீபன்)
இறந்த வயது 28
விஜயானந்தன் கஜீபன் 1981 - 2010 ஜெயந்திநகர் இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

கிளிநொச்சி ஜெயந்திநகரை பிறப்பிடமாகவும் சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயானந்தன் கஜீபன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பு நண்பனே! ஆருயிர்த் தோழனே!
ஆண்டுகள் பத்து ஆனது நீ மறைந்து...
ஆயினும் உன் நினைவு மறையாது எம்மை விட்டு

இன்பமோ துன்பமோ எம்முடன் இணைந்திருந்தாய்
இருக்கும் இடமெல்லாம். உன் காந்தக்குரல் கொண்டு
களிப்புடனே பேசி.. கலகலப்பாய் ஆக்கிடுவாய்
நட்பிற்கு இலக்கணமாய் வாழ்ந்தவன் நீ

நேசத்திற்குரியவனே!நெஞ்சம் வெதும்புதடா
காலக்கொடியவன் கண்வைத்து உன் உயிரை
வேளை வருமுன்பே விரைந்து ஏன் பறித்தான்?
பழக இனியவனே!பாசத்திற்குரியவனே!

நிலையில்லா இவ்வுலகில் நீடு புகழ் கொண்டோரில்
நிலையான இடம் உனக்கு எம்மனதில் என்றும் உண்டு

ஆண்டவன் திருப்பாதம் சரண் புகுந்த
உன் ஆத்மா சாந்தி பெற வேண்டுகின்றோம்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

உன் பிரிவால் என்றும் வாடும்
குடும்பத்தினர், நண்பர்கள்.

அன்னாரின் நினைவஞ்சலி 18-01-2020 சனிக்கிழமை அன்று Sportweg-34 3097 Liebefeld, Switzerland எனும் முகவரியில் நடைபெறவுள்ளது இந்நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்: நண்பர்கள்

தொடர்புகளுக்கு

ஜோன்சன் - நண்பன்
கண்ணன் - நண்பன்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Selvarajah Sabaratnam Manipay, France, Thirunelveli, London - United Kingdom View Profile
  • Sivasambu Suriyakumar Jeyanthinakar, Nainativu View Profile