Born 07 DEC 1949
Died 05 JUN 2019
Mr Arumugam Kunalingam
Age 69
Arumugam Kunalingam 1949 - 2019 Thellipalai Sri Lanka

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்த தெல்லிப்பழை கொல்லங்கலட்டியில் புகழ் பூத்த சீமான் ஆறுமுகம் அவர்தம் பாரியார் சரஸ்வதிக்கு அருமைப் புத்திரனாக 07/DEC/1949 ஆம் ஆண்டில் திரு.குணலிங்கம் அவர்கள் இவ் அழகிய பூமியில் காலஞ்சென்ற மனோன்மணி, தவமணி, திலகவதி, தர்மலிங்கம், காலஞ்சென்ற சிவலிங்கம், லோகலிங்கம், மகேஸ்வரி, நவமணி போன்றவர்களின் பாசமிகு சகோதரனாக அவதரித்தார்.                                        

அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடனும் சகோதரர்களுடனும் சேர்ந்து விவசாய முயற்சியில் ஈடுபட்டதுடன், திரு.திருமதி சட்டநாதர் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளான சரஸ்வதியை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றிக் கொண்டார். இனிமையான இவர்களின் இல்லறவாழ்வின் பயனாக கேதீஸ்வரன், சுபாயினி, சுமதி, மணிமாறன், சுதாமினி, நிசாந்தன் என்ற நற் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து அவர்களின் விருப்பத்தின் காரணமாக சுபாயினி, முகுந்தன், ஜீவசுரேன், மதுரிகா, மைக்கல், துவாரகா போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து அனாமிகா, பிரவீன், சாருஜன், சஸ்மிதன்  போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                               

மேலும் நாட்டின் அசாதாரணச் சூழ்நிலை காரணமாக தாம் நேசித்த மண்ணைவிட்டு ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்து வந்ததுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும்  பொறுமைசாலியும் நிறைந்தவராக  விளங்கினார், நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும்,இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் சகோதரபாசம் நிறைந்தும்,பிள்ளைப்பாசம் கொண்டும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு  பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 05.06.2019 இல் 69 வயதில் ஜேர்மனியில் உள்ள Stuttgart நகரில் இறைபதம் அடைந்தார் அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

தெல்லிப்பழை தந்த       
........ தென்றல் காற்றே
அல்லிப் பூப்போல்             
.......அற்புத சிரிப்பே
நெல்லிக் கனி போல்          
........நெஞ்சில் இனிமையுடன்
அல்லும் பகலும் கூடியிருந்து                     
......அகிலம் துறந்தீரே