1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 FEB 1932
இறப்பு 23 JAN 2020
அமரர் பொன்னுச்சாமி சீதேவிப்பிள்ளை (வாலாம்பிகை)
இறந்த வயது 87
பொன்னுச்சாமி சீதேவிப்பிள்ளை 1932 - 2020 இலுப்பைக்கடவை இலங்கை
Tribute 19 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மன்னார் இலுப்பைக்கடவை முதலியார்கமத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னுச்சாமி சீதேவிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா.....

அன்னை ஓர் ஆலயம் அதில்
அமர்ந்திருக்கும் தெய்வம் நீ!
பத்து மாதம் கருவறையில்
கலங்காமல் காத்தவள் நீ!   

நீ விட்டுச்சென்ற
அழகான ஞாபகங்கள்
என்றுமே வெளுத்துக் கலைந்து போகாது

நீ தந்த சந்தோஷ தருணங்களிற்கு
வேறு எந்த உவமையும் இணையாய்
எங்களுக்கு விளைந்து போகாது

நீ இல்லாத உலகம் இருள் சூழ்ந்த
முழு வெறுமையை அன்றி வேறெதையும்
தந்து போகாது

ஆண்டுகள் எத்தனை போனாலும்
நீ எம்மோடு பேசிய கதைகள்
நம் நெஞ்சை விட்டு அகன்று போகாது

உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது   

உங்கள் ஆத்மா சாந்தியடைந்து
இறைவனடி சேர எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி தினமும்
உங்கள் பாதம் பணிகின்றோம்... 

உங்கள் பிரிவால் துயருறும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
உற்றார், உறவினர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

View Similar profiles

  • Pethurupillai Keethaponkalan Mandaitivu 4th Ward, California - United States View Profile
  • Shanmugam Balasundram Ampan, France View Profile
  • Thambiah Thiyagarajah Velanai North, London - United Kingdom View Profile
  • Alagammah Kanapathy Achchuveli, Vayavilan, London - United Kingdom View Profile