13ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 11 JAN 1970
ஆண்டவன் அடியில் 13 APR 2006
அமரர் பஞ்சாட்சரம் கிருபாகரன்
உரிமையாளர் சாரங்கன் நகைமாடம்- கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணம்
இறந்த வயது 36
பஞ்சாட்சரம் கிருபாகரன் 1970 - 2006 சாவகச்சேரி இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சாவகச்சேரி பெருங்குளம் பிள்ளையார் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், ”குருபவனம்” கண்டி வீதி சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பஞ்சாட்சரம் கிருபாகரன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டவனால் நேசிக்கப்பட்ட பேர்கள்
அரைவயதிற் கால்வயதில் அகல்வர் என்னும்
நீண்டநெடுந் தத்துவமொன்றுலகில் உண்டு
மரணங்கள் மலிந்துவிட்ட தேசத்தில்
எமதன்பு மகனாய், சகோதரனாய், உறவாய் மலர்ந்தவனே!

எங்களுக்கு ஒன்றென்றால் உன்னையே தந்திடத் துடிப்பவனே
உன்னை வரமாக எங்களுக்கு தந்த தெய்வம்
பாதி வழியிலே ஏன் பறித்துவிட்டான்? தேடியும்
கிடைக்காத செல்வமடா- நீ
தீயிலும் தீயாத தங்கமடா!
தாண்டரிய நீள்கடலாம் விதியைத் தாண்டத்
தரணியில் தக்கவர்கள் யாருமில்லை
என்றென்றும் உன் நினைவால் உருகியிங்கு துடிக்கின்றோம்

என்றும் உன் நினைவுகளுடன்!
அம்மா, அண்ணாமார், அக்கா, தங்கைமார், அண்ணிமார்,
அத்தான், மச்சான்மார், பெறாமக்கள், மருமக்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ப. தவராஜா
சாரங்கா நகைமாடம்
பாலசாரங்கா நகைமாடம்

Summary

Photos

No Photos