Born 19 JAN 1955
Died 07 SEP 2019
Mr Ambalavanar Yogeshwaran
Age 64
Ambalavanar Yogeshwaran 1955 - 2019 Kopay Sri Lanka

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணம் கோப்பாயில் புகழ் பூத்த சீமான் திரு.அம்பலவாணர் அவர்தம் பாரியார் நாகம்மா அவர்களின் அன்பு மகனாக 19/JAN/1955 ஆம் ஆண்டில் திரு.யோகேஸ்வரன் அவர்கள் இவ் அழகிய பூமியில்  அவதரித்தார்.                                            

அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தந்தையுடனும் கணேசலிங்கம், சத்தியஞானதேவி, குஷலகுமாரி, பரமேஸ்வரன், நகுலேஸ்வரன், கலாநிதி, பத்மநாதன், உதயகுமார் போன்ற உடன்பிறப்புகளுடன் சேர்ந்து சொந்தத் தொழில் செய்து உயர்நிலை அடைந்த இவர்  திரு.திருமதி கந்தசாமி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளான புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்த கல்லூரி ஆசியையான சிவதேவி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தார்.                                                 

மேலும் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும்  கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக  விளங்கினார்.                                                                                
இவ்வாறு மனைவி, சகோதரங்கள், உற்றார், உறவினர் நண்பர்கள் என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 07.09.2019 இல் 64 வயதில் புத்தூரில் இறைபதம் அடைந்தார்.
அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

“அன்புள்ளம் கொண்ட மனிதன்
பண்புள்ளம் கொண்ட கலைஞன்
நின் புகழ் உயர நித்தம் உழைத்தவன்
சொல் பேசாத வள்ளளே
என் மனம் ஏக்கம் கொள்ள
எங்கே பேனீர் துனையே”