Born 26 OCT 1949
Died 02 JUN 2019
Mr Pasupathy Thambipillai Tharmalingam
Age 69
Pasupathy Thambipillai Tharmalingam 1949 - 2019 Puloly South Sri Lanka

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகிய வடமராட்சியில்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த புலோலி தெற்கில் 26/Oct/1949 இல் வைத்தியர் தம்பிப்பிள்ளை கனகவல்லி தம்பதியர்களுக்கு அன்பு மகனாக திரு.தர்மலிங்கம் இவ் அழகு நிறைந்த இடத்தில்   மழலையாக அவதரித்தார்.                                         

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் விசுவலிங்கம், வைத்தியர் சிவலிங்கம், நடராஜா, பஞ்சலிங்கம், விஜயலட்சுமி ஆகிய உடன் பிறப்புடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி குணசிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகள் சாந்தா எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து  இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து தனுசன், தர்சிகா போன்ற அன்புப் பிள்ளைகளை பெற்று வளர்த்ததுடன், பெரியவர்கள் ஆனதும் பிருந்தன் என்பவரைத் திருமணம் முடித்து வைத்து ஆரியா என்ற ஒரே ஒரு  பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.                                           

மேலும் தாய்நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக தான் நேசித்த மண்ணை விட்டு லண்டன் சென்று குடியேறி கடினப்பட்டு உழைத்ததுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக  விளங்கினார்,  இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள்,பேரப்பிள்ளை, உற்றார், உறவினர்கள்  என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 02.06.2019 இல் 69 வயதில் பிரித்தானியாவில் உள்ள Londan நகரில் இறையடி எய்தினார், அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

புலோலி மண்ணின்       
......புகழ் பூத்த
வைத்தியர் சேவையை      
.......வழங்கிய குடியில்
தந்தையின் மகனே     
.......தயவான உறவே
வந்து வாழ்ந்தீரே     
........விட்டுப் பிரிந்தீரே