Born 13 SEP 1947
Died 27 SEP 2019
Mr Kanagaratnam Kanapathippillai
(Mcsc, System Engineer Microsoft, Cisco Network Engineer) ஓய்வுபெற்ற இலங்கை புகையிரத திணைக்கள உத்தியோகத்தர், MacDonald Douglas Aircraft Company- Project Riiyadh தொலைத்தொடர்பு மேலதிகாரி, பணிப்புலம் ஶ்ரீ முத்துமாரியம்பாள் ஆலய மூத்த ஆதீன கர்த்தா, கனடா பண்கலை பண்பாட்டு கழகத்தின் முன்னாள் போசகர், பணிப்புலம் டொட் கொம் இணையத்தின் நிறுவனர், இயக்குனர்
Age 72
Kanagaratnam Kanapathippillai 1947 - 2019 Pandatharippu Sri Lanka

வாழ்க்கை வரலாறு

தனது கிராம மக்களால் ஊருக்கே தந்தை போன்றவர் என அழைக்கப்பட்டவரும், நல்வாழ்வை வாழ்ந்த மாமனிதருமான A C வேலாயுதபிள்ளை கந்தையா அவர்களின் வாழ்க்கை வரலாறிது...

”தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில், ஜகத்தினை அழித்திடுவோம்” என உலகிற்கு உரக்கச்சொன்ன மக்களான தமிழர்கள் அதிகமாக வசிக்கும் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பனிப்புலத்தில், வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என தன் செயலால் மக்களுக்க போதிக்க அந்த இறைவனால் அருளப்பட்டு கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வராக கனகரத்தினம் அவர்கள் 13/SEP/1947 ஆம் ஆண்டு இந்த மண்ணில் அவதரித்தார்.

பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த இவர், அறிவியல் சார்ந்த பாடங்களில் மிகச்சிறந்த மாணவராக விளங்கினார். வளர்ந்து பெரியவரானதும் 1971ஆம் ஆண்டு தம்பிப்பிள்ளை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளான தனலட்சுமி எனும் நல்லுள்ளம் கொண்டவரைத் திருமணம் முடித்து இல்லற வாழ்வை சந்தோசமாக வாழ்ந்ததால், முகுந்தன், துஷ்யந்தி, குமரன், துஷாதா, துஷிதா எனும் செல்வங்களை பெற்று அவர்களுக்கு கல்வி எனும் பெருஞ்செல்வத்தை வழங்கி, நல்ல கருத்துக்களை போதித்து வளர்த்தார்.

தனது கிராமத்தில் அனைவரோடும் வயது பாரபட்சமின்றி பழகிய இவர், அவர்களால் அன்போடு கிராமத்தின் தந்தை என்றே அழைக்கப்பட்டார். தனது வாழ்க்கை கடமையான தனது பிள்ளைகளுக்கு திருமணம் செய்தல் எனும் பெரும் பணியை செவ்வனே முடிக்க, கௌரி, மனோகரதாஸ், அகலிகா, சுபேந்திரன், ரஜீவன் எனும் நல்ல வாழ்க்கை துணைகளை தனது பிள்ளைகளுக்கு தேர்ந்தெடுத்து மணமுடித்து வைத்தார். தங்களுது குடும்பத்தின் பரம்பரை உரிமையான பனிப்புலம் ஶ்ரீ முத்துமாரியம்பாள் ஆலய மூத்த ஆதீன கர்த்தாவாகவும் விளங்கிய இவர், Mcsc, System Engineer Microsoft, Cisco Network Engineer)இலங்கை புகையிரத திணைக்கள உத்தியோகத்தராகவும், MacDonald Douglas Aircraft Company- Project Riiyadh தொலைத்தொடர்பு மேலதிகாரியாவும் திறம்பட பணியாற்றினார்.

கனடாவிற்க்கு குடிபெயர்ந்து வாழத்தொடங்கிய இவர், கனடா பண்கலை பண்பாட்டு கழகத்தின் போசகராகவும், பணிப்புலம் டொட் கொம் இணையத்தின் நிறுவனராகவும் விளங்கினார். பரந்த சிந்தனையை கொண்டதுடன், ஜாதகத்தில் ஆழ்ந்த புலமை உடையவராகவும் இருந்தார். தனது உற்றார் உறவினர்களிடத்திலும், பேரப்பிள்ளைகளிடத்திலும் அலாதி பாசம் கொண்டதுடன், அனைவருக்கும் அன்பான ஆலோசகராகவும் திகழ்ந்தார்.

ஊருக்கே முன் மாதிரியாக விளங்கிய இந்த மாமனிதர், அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தி, நல்லவர்களைத்தான்ன அந்த இறைவன் முதலில் தன்னிடம் அழைத்துக்கொள்வான் என்கின்ற கூற்றை மெய்யாக்கி, 27.09.2019 இல் தனது 72 வயதில் இறைவனடி சேர்ந்தார்.


குறிப்பு: இவரின் மறைவை அறிந்த இவரின் சொந்த ஊரான பண்டத்தரிப்பு பனிப்புல கிராம மக்கள், பேனர் வைத்தும், ஒலிப்பெருக்கி மூலம் இவரின் மறைவை அண்டை கிராமங்களுக்கு அறிவித்தும் இவர் மீது அவர்கள் கொண்ட அன்பை வெளிப்படுத்தி, தங்களது அஞ்சலிகளை சமர்பித்தனர். இவரின் மறைவால் ஊர் கோயிலின் பூசைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.