மரண அறிவித்தல்
பிறப்பு 11 FEB 1954
இறப்பு 11 JAN 2021
திரு ஜோசவ் எட்மன் எல்மோ (சிங்கன்)
BSC Mechanical Engineering PGD Fuel Technology Diploma in Electrical Studies
வயது 66
ஜோசவ் எட்மன் எல்மோ 1954 - 2021 இளவாலை இலங்கை
Tribute 41 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஜோசவ் எட்மன் எல்மோ அவர்கள் 11-01-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சேனாதிராஜா(சேனர்) தம்பதிகள், திரு. திருமதி நீக்கிலாப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான திரு. திருமதி  மேரி ஜோசவ் லூட்ஸ் தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,

லீலா எல்மோ அவர்களின் பாசமிகு கணவரும்,

அன்ரோனியஸ்(Antonius), ஜோஷன்(Joshan) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

றூபா(Rupa), ஷாமினி(Shamini) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற றாயன், எட்னா(லண்டன்) அவர்களின் பாசமிகு தம்பியும்,

றஞ்சன்(லண்டன்), சிறான்(லண்டன்), சிறானி(லண்டன்), றவீந்தரன்(அவுஸ்திரேலியா), மகாராணி(லண்டன்), வினோதினி(லண்டன்), சுபோதினி(லண்டன்) ஆகியோரின் அன்பு அண்ணனும்,

திருமதி. றஞ்சி கந்தசாமி அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10-02-2021 புதன்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் அவரது இல்லத்திற்க்கு எடுத்து வரப்பட்டு குடும்ப உறவினர்களுடன் இறைவழிபாடு நடைபெறும்.

அன்னாரின் பூதவுடல் 11-02-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் திருப்பலிக்காக St Saviour’s Church 175 Lewisham High St, Lewisham, London SE13 6AA, United Kingdom எனும் முகவரிக்கு எடுத்துச் செல்லப்படும்.

ந.ப 12:00 மணி திருப்பலியைத் தொடர்ந்து அன்னாரின் நல்லடக்கம்Kemnal Park Cemetery & Ceremonial Park, A20 Sidcup By-Pass, Chislehurst, BR7 6RR எனும் சேமக்காலையில் பி.ப 01:30 மணிக்கு நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு

Live Link: https://avisonyoung.zoom.us/j/...

Meeting ID: 622 557 3962

நாட்டின் தற்போதைய நடைமுறைகளுக்கு ஏற்ப குடும்பத்தாருடன் நடைபெறும் என்பதை அன்புடன் அறியத் தருகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லீலா - மனைவி
அன்ரோனியஸ் - மகன்
ஜோஷன் - மகன்
சிறான் - சகோதரர்

Summary

Photos

View Similar profiles