31st Day Remembrance
Mr Ponnuthurai Thambirajah (Thambi) Former director of American Centre & International Centre for Ethnic Studies (ICES) Born : 05 JAN 1932 - Rest : 18 SEP 2020 (Age 88)
Lived Place Colombo
Ponnuthurai Thambirajah 1932 - 2020 Urumpiray Sri Lanka
31st Day Remembrance

As we had been in deep grief after hearing the demise of our loved one, we would like to thank all those relatives, friends and all people who had been helpful to us. We deeply appreciate your sympathy by sending condolence messages in person, through phone calls, mails and social medias. Your words and support have been very helpful to us in this time of grief.

சார்வரி வருஷம் புரட்டாதித் திங்கள்
பூண்ட பூர்வபக்க  துவிதியையில் - சிவனடியே
தஞ்சமென தரணிவிட்டுத் தாவினார் தங்கமகன் 
தம்பிராஜா பந்தங்களை மறந்து

மனிதரில் ஓரு மாணிக்கமே
காணக் கிடைக்காத தங்கமே
உறவாக எங்களுக்கு கிடைத்த வைரமே

அமைதியின் இருப்பிடமே 
கடமையின் பிறப்பிடமே
பண்பின் உறைவிடமே
கண்ணியத்தால் உயர்ந்தாய்
தகைமைகளால் வளர்ந்தாய்

பதவிகளில் மிளிர்ந்தாய்
பாசத்தால் அணைத்தாய்
நல்ல மகனாய் கடமை செய்தாய்
பொறுப்பான சகோதரனாய் கடமை செய்தாய்
கைப்பிடித்த மனைவிதனைக் கடைசிவரை காத்து நின்றாய்

பெற்றெடுத்த மகள் தன்னை ஊர் புகழ வளர்த்தெடுத்தாய்
யாருக்கும் கிடைக்காத தாய்மாமன் என்று நிரூபித்தாய்
மண்ணின் மைந்தனென ஊருக்கும் கடமை செய்தாய்
நல்ல மருமகனை மகளுக்கு மணமுடித்தாய்

பேரன் பேத்திகளை கண்குளிரப் பார்த்து விட்டாய்-இன்று
இவ்வுலக வாழ்வு இனிப் போதுமென்று முடிவெடுத்து
இறைவன் திருவடி நாடிப் புறப்பட்ட உன் சீவன் 
சிவனடியைப் பற்றி பேரின்பம் பெறவே பிரார்த்திப்போமாக....
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!!!


அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ஐக்கிய அமெரிக்காவில் நடைபெறும்.

With sincere thanks, Family
Tribute 8 people tributed
Share your thoughts, memories..etc