மரண அறிவித்தல்
பிறப்பு 04 JAN 1967
இறப்பு 09 AUG 2020
திருமதி மாலினி பாஸ்கரன்
மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்- முல்லைத்தீவு
வயது 53
மாலினி பாஸ்கரன் 1967 - 2020 நாரந்தனை இலங்கை
Tribute 36 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் அரசடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட மாலினி பாஸ்கரன் அவர்கள் 09-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(ஓய்வுபெற்ற அதிபர்) சோமவதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம் இராஜலிங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

வேதவதி அவர்களின் அன்புப் பெறா மகளும்,

காலஞ்சென்றவர்களான நவரத்தினம் கனகமணி(இணுவில் மேற்கு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாஸ்கரன்(Wesco Pharmacy) அவர்களின் பாசமிகு துணைவியும்,

சாலினி, தேவன் இளங்கோ(லண்டன்), கௌரி(வசந்தா), திருமகள்(மீரா), காலஞ்சென்ற சூலபாணி, மன்றுளாடி(வவுனியா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

பரமேஸ்வரன்(ஓய்வுபெற்ற லிகிதர்), கிருஷ்ணவேணி, கலைவாணி(ஆசிரியை- வ/மூன்று முறிப்பு அ.த.க.பா), பத்மராணி(ஆசிரியை- யா/ ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாலயம்), காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி(கணக்காளர்), யோகலட்சுமி(லண்டன்), காலஞ்சென்ற சச்சிதானந்தன், தேவிகா(ஆசிரியை- வ/ தமிழ் மத்திய மகாவித்தியாலயம்), ராஜினி(ஆசிரியை- வ/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விசாகி அவர்களின் பாசமிகு சித்தியும்,

அபிராமி, விஷ்ணுவர்த்தன்(Commercial Leasing & Finance) ஆகியோரின் அன்பு மாமியும்,

சாரங்கன், சயந்தினி, அபிரிகா, அபிஷகன், மயுரிகா, லக்‌ஷிகன் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

கோவேலன், கௌரீசன், ஏரகன், தரசுதா, ஜனரஞ்சினி, திருவேணி, அபிவர்ஷினி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-08-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

View Similar profiles