31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
பிறப்பு 26 APR 1926
இறப்பு 17 SEP 2020
அமரர் செல்லத்துரை இரத்தினம்
இறந்த வயது 94
செல்லத்துரை இரத்தினம் 1926 - 2020 கொழும்புத்துறை இலங்கை
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 16.10.2020

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை இரத்தினம் அவர்களின் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
அன்போடு எங்களை அனுதினமும் அரவணைத்தாய்
அல்லும் பகலும் அயராமல் எமை காத்தாய்
உலகுக்கு நீ உத்தமனாய் வாழ்ந்து நின்றாய்

உயிரிலும் உணர்விலும் ஒன்றாக கலந்திருந்தாய்
உயிர் உள்ள வரை உங்களோடு இருப்பேன் என்றாய்
ஒன்றுக்கும் கலங்கவில்லை நாம் உன்னோடு இருந்தவரை

உள்ளத்தில் பல கனவு ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று கனவிலும் நினைக்கவில்லை...!

சத்தம் இல்லாமல் சித்தம் துடிக்க வைத்து
மொத்தமாய் எங்களை மோசம் செய்ததென்ன?
முப்பத்தொரு நாட்கள் போனால் என்ன
முப்பதாண்டுகள் கடந்தாலும்- உங்கள்
வாழ்வும் வாக்கும் பயின்றே வாழ்வோம்!

எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட செல்லத்துரை இரத்தினம் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல்: வரதன்(மகன்)

தொடர்புகளுக்கு

விஜயகுமாரன் - மகன்

Photos

No Photos

View Similar profiles