Born 03 NOV 1933
Died 04 OCT 2019
Mrs Parasakthy Karthigesu
Age 85
Parasakthy Karthigesu 1933 - 2019 Pungudutivu 12th Ward Sri Lanka

Tribute

மலர்விழி/ விஜி ஜெய்கிஷன் வேலாயுதம். 05 OCT 2019 Norway

எனது அன்புத்தோழியும் சிறுவயது முதலே வட்டக்கச்சியில் ஒன்றாக எங்களோடு கல்வி கற்ற ஞானாவின் அம்மா " பராசக்தி அக்கா " இயற்கை எய்தியமை அறிந்து வருந்துகிறோம். அம்மா எப்போதும் அன்பாகவும் சுறுசுறுப்பாகவுமே இருப்பார். கணவன் பிள்ளைகள் சுற்றத்தாரே அவரது உலகம். தனித்தன்மையான அவரின் குரல் இப்போதும் காதுகளில் கேட்கிறது. எந்நேரமும் சிரித்த முகத்தோடும் ஆளுமையோடும் வாழ்ந்த ஞானாவின் அம்மா தன்பிள்ளைகள் போலவே எங்களுக்கும் அறிவுரை கூறுவார். துணிச்சலாக தைரியமாக வாழ வேண்டும் என்பார். நற்பண்புகளுடன் பிள்ளைகளை வளர்த்தார். அம்மாவின் இழப்பை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது. அவரது இழப்பால் துயரத்தில் இருக்கும் உங்கள் அனைவரது துன்பத்தில் நாமும் பங்குகொள்கிறோம். அம்மாவின் ஆத்மா இறைவன் சந்நிதியில் சாந்தியடையட்டும்! எமது கண்ணீர் அஞ்சலிக்கு. 💐💐💐💐🙏🙏🙏💐💐💐💐

Tributes