Born 03 NOV 1933
Died 04 OCT 2019
Mrs Parasakthy Karthigesu
Age 85
Parasakthy Karthigesu 1933 - 2019 Pungudutivu 12th Ward Sri Lanka

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 12ம் வட்டாரத்தில் 03/NOV/1933 இல் செல்லப்பா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளாக, பராசக்தி கார்த்திகேசு அவர்கள் இவ் அவனியில் அவதரித்தார்.

அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் ஆறுமுகம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனான, கார்த்திகேசு அவர்களைத் திருமணம் முடித்து சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக, தயாபரன், சேதுபரன், சிவபரன், வடிவாம்பிகை, ஞானம்பிகை, ரகுபரன்,கிரிபரன், செல்வபரன் ஆகிய அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து, சரோஜினி, தர்மபூவதி, யசோதாதேவி, பாஸ்கரன், வசீகரன், சுபாசினி, தர்சினி, ராஜி ஆகியோர்களைத் திருமணம் முடித்து வைத்து,சுமன், சாலினி, ஜஸ்னா, டனிலா, தூரிகா, சிந்துகா, சாமிகா, சானுகா, நிவேதா, அஜித்தா, சுவேதா, நிலக்‌ஷா,யஸ்சிகா, அனோஸ்கா, யதுஸ், அதுஸ்கா, ஆயூஸ், பிரஜின், பிரத்திக் எனும் பேரப்பிள்ளைகளுடனும், றொகான் எனும் பூட்டப்பிள்ளையுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவரான இவர், தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர். மேலும் வாழ்வில் அன்பும் கருணையும் கொண்டு உதவிகள் செய்து, சுவையான உணவுகள் செய்வதில் கைதேர்ந்தவராக விளங்கினார்.

இவ்வாறு பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை, உற்றார், உறவினர்கள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர் 04.10.2019 இல் 85 வயதில் கனடாவில் மரணம் அடைந்தார்.