Born 07 JAN 1946
Rest 07 SEP 2019
Mr Krishnapillai Parnapas Mylvaganam
Age 73
Krishnapillai Parnapas Mylvaganam 1946 - 2019 Suthumalai Sri Lanka

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் நெல்வயலும் நீண்டு வளர்ந்த பனைமரங்களும், ஆல், அரசு, வேம்பு என்பன சூழ்ந்துள்ளதும், பூசனி வெங்காய வயல்களுடன் வாழைத்தோட்டங்கள், பயன்தருமரங்கள் என அழகிய சுதுமலையில் 07/JAN/1946 இல் கிருஷ்ணபிள்ளை பர்னபஸ் மயில்வாகனம்  அவர்கள்  இவ் அழகு நிறைந்த ஊரில் மழலையாக அவதரித்தார்.                                        

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர்  குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் சந்திரதேவி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து சரோஜினிதேவி, மைதிலி போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து யோகராஜா, கஜேந்திரன் போன்றவரை திருமணம் முடித்து வைத்து Avlyn, Ram, noelyn,Andrew, Ramja,Ebenezer, Vijay போன்ற அழகும் அறிவும் நிறைந்த பேரப்பிள்ளைகளுடன் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தார்.                                            

மேலும்  வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் கொண்டதுடன் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டு விளங்கினார்.                                                                                                        

இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உடன்பிறப்புகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 07.09.2019 இல் 73 வயதில் ஜேர்மனியில் உள்ள பெர்லினில் இறையடி எய்தினார், அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம். 

"சுதுமலை மண்ணின் சிரிப்பு உள்ளமே
பதுமைக் குணம் நிறைந்த உறவே
எதுகை மோனை போல்
அன்பும் பண்புமாக வாழ்ந்தீரே
வெதும்பி அழுகிறோம்
விடைதேடி தவிக்கிறோம்"