15ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 29 DEC 1961
உதிர்வு 19 MAY 2005
அமரர் பர்னான்டோ இக்னேசியஸ் கிளேனி
இறந்த வயது 43
பர்னான்டோ இக்னேசியஸ் கிளேனி 1961 - 2005 திருகோணமலை இலங்கை
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பர்னான்டோ இக்னேசியஸ் கிளேனி அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.

15 ஆண்டுகள் ஓடிச் சென்றாலும்- என்னை
விட்டு நீங்காது உம் நினைவுகள்
ஏங்குகின்றேன் உம்மோடு வாழ்ந்த- சில
காலங்களை எண்ணி...

ஐந்து சகோதரிகளோடு- தம்பியாகவும்
அண்ணனாகவும் பாசத்தோடு
வாழ்ந்த நாட்களை- எண்ணி
இன்றும் ஏங்குகிறார்கள்

கனவுகள் பல கண்டோம்- எம்
அருகில் நீங்கள் இருப்பீர்கள்- என்று
நாம் கண்ட கனவுகள் நனவாகும்- முன்பே
பாதி வழியில் எங்களை மறந்து சென்றீரே
உம் பாசத்திற்காக ஏங்குகின்றோம்- சித்தப்பா

நீர் தான் உலகமென வாழ்ந்திருந்த- சித்தியின்
நாட்களெல்லாம் கண்ணீரில் கரைந்தோட
கலங்கி நிற்கிறோம்- சித்தப்பாவே

எத்தனை உறவுகள் எம்மைத் தேடி
வந்தாலும் சித்தப்பாவே- உமக்கீடாகாது எதுவுமே

உங்களை நேசித்த உயிருக்கு உயிரான
உறவுகளாக நாங்கள்
உங்கள் நினைவுகளோடு இன்றும்
வாழ்கின்றோம்...  

தகவல்: பத்மா(மனைவி), சாந்தி

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Neelambikai Santhirasekaram Trincomalee, Mitcham - United Kingdom, Kaddaiparichan View Profile
  • Mahalingam Selvakumar Trincomalee, Lausanne - Switzerland View Profile
  • Ratneswary Subramaniam Thumpalai, Point Pedro View Profile
  • Pirabakaran Markandu Iruppiddi, Montreal - Canada, Scarborough - Canada View Profile