1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 23 JUL 2014
இறப்பு 08 APR 2020
செல்வி கர்ணிகா மடோனா மொறிஸ்
இறந்த வயது 5
கர்ணிகா மடோனா மொறிஸ் 2014 - 2020 பிரான்ஸ் பிரான்ஸ்
Tribute 53 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கர்ணிகா மடோனா மொறிஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

"குழல் இனிது யாழ் இனிது என்பர்
தம் மக்கள் மழலைச் சொல் கேளாதோர்"
என்ற வள்ளுவன் வாக்குப்படி
உன் பேச்சில் ஒலித்தது சங்கீதம்!
உன் "கல கல" சிரிப்பில் எழும்பியதுவீணையொலி!


பிரிவைப் பற்றி பறை சாற்ற உன் உறவு தேடி,
அப்பாவின் அம்மாவின்
சுற்றம் தேடி, முத்தமிட்டு வந்ததை
எண்ணி பித்தம் எம் தலையேறுவதை
யார் அறிவார்!

சாதனைகள் படைத்திடுவாய் என்று
நாம் இருக்க, எல்லாம் கனவாகிப் போனதே!
கண் மூடித் திறப்பதற்குள் உன்னை
சாவு வந்து அழைத்துச் சென்ற
மாயம் என்ன?

உன் துடுக்கான செய்கையும்
அன்பான பார்வையும்,
அழகான வதனமும், அல்லிப்பூ முகமும்,
முல்லைச்சிரிப்பும் கண் எதிரில் நிற்கின்றன...

உன் அன்பாலும், உன் அதீத திறமையாலும்
எல்லோரையும் அதிசயிக்கச் செய்தாய்!
எம் நினைவுகள் என்றென்றும் உன்னோடு தான்!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

View Similar profiles