5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 MAY 1957
இறப்பு 21 FEB 2016
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
இறந்த வயது 58
நளினி ரவீந்திரகுமார் 1957 - 2016 உடுவில் இலங்கை
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 26.02.2021

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நளினி ரவீந்திரகுமார்(பவா) அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

என் ஆருயிர்த் தெய்வமே அன்பான உத்தமியே!
என் தாய்க்கு பின் என் தாரமாய் தாயாக ஆனவளே!
நேசம் மரிக்கவில்லை நினைவுகள் கலையவில்லை!
என் அழியாச் சொத்து அலைமோதிப் போனதனால்
உற்ற துணையிழந்து உருகி மடிகின்றேன்!

அரும்பசி வந்தபோது செல்லா உங்கள் நினைப்பு
ஆற்றாநோய்க்கும் நீங்கள் தானே அம்மா மருந்து
ஆயிரம் உறவுகள் பூமியில் இருந்தும்- என்ன
பவா குட்டியே உங்களுக்கு ஒப்பாகுமோ ஓர் உறவு

அன்னையாய் அரவணைத்து வையகத்தில் வாழ வைத்தீர்கள்
மண்ணுலகம் துறந்து விண்ணுலகம் சென்றீர்கள்!
ஆண்டு ஐந்து ஆனால் என்ன ஐயாயிரம் ஆகட்டும்
எம்முடன் நிழலாய் வாழ்கின்றீர்கள் !

அன்பே துணைவி அன்பே அன்னை!!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

என்றும் உங்கள் நினைவில் வாழும்
அன்புக் கணவர் ரவீந்திரகுமார்(கண்ணன்),
மகள், மருமகன், பேரப்பிள்ளைகள், உறவினர்....

உங்கள் ஆத்மா சாந்தியடைய என்று என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
   

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

View Similar profiles