பிரசுரிப்பு
மரண அறிவித்தல்
அன்னை மடியில் 21 AUG 1965
இறைவன் அடியில் 01 DEC 2018
கலாநிதி நவரத்னலிங்கம் விவேகானந்தா (விவே) MD.PhD
பிறந்த இடம் வேலணை மேற்கு
வாழ்ந்த இடம் Croydon
நவரத்னலிங்கம் விவேகானந்தா 1965 - 2018 வேலணை மேற்கு இலங்கை
Tribute 20 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

 யாழ். வேலணை மேற்கு தலைகாட்டியைப் பிறப்பிடமாகவும், இலண்டன் Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்னலிங்கம் விவேகானந்தா அவர்கள் 01-12-2018 சனிக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நவரத்னலிங்கம், காலஞ்சென்ற சரஸ்வதி(பள்ளியக்கா) தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, பவளநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவராணி(தவம்) அவர்களின் அன்புக் கணவரும்,

சாய், சாய்நாத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜயா(விஜி- கனடா), இராஜவினோதா(வினோ- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குகநேசன், வசந்தகுமார், முருகையா, கனகம்மா, காலஞ்சென்ற ஆறுமுகம், சரஸ்வதி, சக்திவேல், ரவி  ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வசந்தா, பகீரதி, சைலா, அன்னலிங்கம், கனகலிங்கம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

கிருசாந், சஞ்சயன், வேணுஜன், சாய்லதன், அபிஷா, அபிஷேக், அபிசனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விமல், விக்னா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சயோன், சயூரன், அபிராம் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

தவராணி - மனைவி
விஜி - சகோதரி
வினோ - சகோதரி
முருகையா - மைத்துனர்
சக்திவேல் - மைத்துனர்
ரவி - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Suresh United Kingdom 2 weeks ago

R.I.P

Sutton tamil welfare center United Kingdom 2 weeks ago

R I P

SUNTHARALINGAM ELIATHAMBY United Kingdom 2 weeks ago

Our heart felt condolences to the rest of the family

From: Reigate and Banstead Thamil Sangham

Sureskanda United Kingdom 2 weeks ago

Our heartfelt condolences to dear friend Ananthan and family. RIP

Sriharan Thambyayah Canada 2 weeks ago

அன்னாரது மறைவுச்செய்தியறிந்து மிகமனவேதனையடைகின்றோம்.எமது கண்ணீர் அஞ்சலியையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்

Amammi United States 2 weeks ago

condolences to all

Sivaram Canada 2 weeks ago

ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

Arulmolei .m Canada 2 weeks ago

I offer my deepest condolences. keeping my thoughts and prayers with your family at this time.RIP.

விமலன் Norway 2 weeks ago

It was truly a pleasure working with your father for (40) years. He will be deeply missed.”

Bama Selva United Kingdom 2 weeks ago

Muruga! We are so sorry to hear your well educated and very young aged Brother in law passed away. Our thoughts are with you and your sister and family at this difficult time. May God give a strength to cope this loss .🙏

Sreekaran Canada 2 weeks ago

Accept my heartfelt condolence. May his soul rest in peace.

Thavavinayahan Canada 2 weeks ago

Vivek: Rest in peace and you will be remembered forever.
Your two year senior friend from JHC.

Keerthi United Kingdom 2 weeks ago

நோயுற்றபோதும் நீ.. நிறைந்ததோர் கனவுக் கூடம்...
நிலவொளியை நிகர்த்த.. இமை மூடா அகல் விளக்கு..
தள்ளாத போதும் தளராத மனவுறுதி..
சரியோ தவறோ.. எதையுமே நகைப்பாக ஏற்று..
மலர்ந்த முகத்தோடு சுற்றிவந்த சிரிப்புச் சக்கரம்..

முடியாது தெரியாது என்ற வார்த்தைகளை விடுத்து..
முடியும் தெரியும் என்று முன்வரிசையில் அமரும் மிடுக்கு..
எட்டாத உயரத்தையும்.. எட்டிப் பார்த்திடும் முயற்சி..
கிட்டாத தூரத்தையும் .. கடந்திட எண்ணிடும் நம்பிக்கை..

தேடித்தேடி வர்ணம் குழைத்து தன்னையே வரைந்த ஓவியம்..
தேவையிலாதொரு கனவை வளர்த்திட்டு தன்னையே எழுதிய காவியம்.
ஆடி அசைந்து அன்பு கலந்துட .. திரை உலகம் அளந்திட்ட தென்றல்..
ஏதுவாகிலும் ஏற்று நடித்திட ஏங்கி அசைந்திட்ட ஊஞ்சல்..
கூடித்திரிந்தோம்.. கண்டு மகிழ்ந்தோம்.. நண்பா..
இது கூற்றன் இயக்கிடும் நாடகம்..
நீ ஏற்று நடித்திட்ட பாத்திரம் முடியுமுன் ..
இறங்கினாய் எனனதான் காரணம்..

"அக்கினிக்கூத்தன் நாடக மன்றம்"

Jeyaratnam Uthayakumaran Australia 2 weeks ago

Please accept our condolences on the passing of your husband / father. It was an honor to have known such a great person and we will truly miss him. When we met him last in our batch get together in Canada in 2014 almost after 32 years, he brought back so many memories back in our school days .
May God embrace you in comfort during this difficult time.

Abika Canada 1 week ago

RIP Anna!
Words can't express how saddened we are to hear of your loss.

RIP

Amirthalingam United Kingdom 1 week ago

அனனாரின் சிவனடி சேர்ந்த தகவல் அறிந்து மிகவும் கவலை கொண்டேன் அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் இப்படி க்கு அமிர்தலிங்கம் நண்பர்

ஆழ்ந்த அனுதாபம், ஓம்சாந்தி

My deep condolences

மதிப்பிற்குரிய நவரத்தினலிங்கம் அவர்களே,

உங்களை, மனையாளை இழந்த துன்பத்தில் கடைசியாகப் பார்த்தபின், இன்று உங்கள் இளவயது மைந்தனையும், அதுவும் 'இவன்தந்தை என்னோற்றான்கொல்!' என எம்மவர் பார்த்து வியக்கும் அறிவுத்துறை சார்ந்து நின்ற இளவலை பிரிந்து நிற்கின்றீர்கள். உங்கள் சோகநிலையை எவ்வாறு கட்டுக்குள் கொண்டுவருவீர்களோ!

அமரத்துவம் பெற்றவரை அஞ்சலித்து, நீங்களும் அமரரின் இரத்த உறவுகளும் எதையும் தாங்கும் இதயம் பெற எம் படைப்பாளியைப் பிரார்த்திக்கின்றேன்.

வாணர், கனடா

Photos

No Photos