Born 08 JAN 1971
Died 25 MAY 2019
Mrs Sathiyamoorthi Vigneshwary (ரஞ்சினி)
Age 48
Sathiyamoorthi Vigneshwary 1971 - 2019 Inuvil Sri Lanka

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின்  அழகு நிறைந்த இடமும், பிரசித்தி பெற்ற கந்தன் ஆலயம் உள்ளதும், படித்தவர்களைக் கொண்டதும், தெங்கு தோட்டம், நெல்வயல்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,புகையிலைத் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த இணுவிலில் 08/JAN/1971 ஆம் ஆண்டில் செல்லதுரை கண்மணி  தம்பதிகளுக்கு அன்பு மகளாக  விக்கினேஸ்வரி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.                            

அன்பும் பண்பும் நிறைந்த இவர் நாகராஜா, தெட்சணாமூர்த்தி, இராஜேஸ்வரன், விக்கினேஸ்வரன், ஞானேஸ்வரன் போன்ற உடன் பிறப்புகளுடன் குறும்புகள் செய்து  வளர்ந்து பெரியவளானதும் சின்னதம்பி ஞானபூரணம்  தம்பதிகளின்  அழகு நிறைந்த ஆண் மகனான சத்தியமூர்த்தி என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்து சிந்து, கீதன், தெய்வீகன் போன்ற பிள்ளைகளை பெற்று வளர்த்ததுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

மேலும் ரஞ்சினி என்று அன்பாக அனைவராலும் அழைக்கப்படும் இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும்,  குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு கணவன், பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த  இவர் 25.05.2019 இல் 48 வயதில் பிரான்ஸில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"இணுவில் மண்ணின்                
......இனிய உறவே
இன்பம் தந்திடும்                
......பண்பு உள்ளமே
இரக்க குணமே                
...... இளகிய மனமே
இங்கே நாம் தவிக்க                
......எங்கே போனீர்"