1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 AUG 1931
இறப்பு 20 SEP 2019
அமரர் வைரவநாதன் பழனி
இறந்த வயது 88
வைரவநாதன் பழனி 1931 - 2019 அனலைதீவு 5ம் வட்டாரம் இலங்கை
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 08.10.2020

யாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைரவநாதன் பழனி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து எங்களை
வானுயர பெயர் விளங்க வைத்த எங்கள்
அன்புத் தெய்வமே ஐயா

நீங்கள் இறைவனடி சேர்ந்து ஓராண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!

கணவனாய், அப்பாவாய், அண்ணனாய்,
மாமனாய், தாத்தாவாய், பெரியப்பாவாய்
பாசமே வேதமாய் எமை ஆட்கொண்டீர்கள்
அதனால் தானோ நித்தம் எம்
உள்ளத்தினுள்ளே வாழுமோர்
உன்னத தெய்வமாகிவிட்டீர்கள் ஐயா...

உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!

நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!

உங்கள் ஆன்மாவின் சாந்திக்கு
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

View Similar profiles