Born 29 OCT 1977
Died 23 JUN 2019
Mr Mahendra Selvaruban
Age 41
Mahendra Selvaruban 1977 - 2019 Uduppiddy Sri Lanka

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்ததுள்ள யாழ்ப்பாணத்தின் உடுப்பிட்டியில் புகழ் பூத்த சீமான் திரு.மகேந்திரா அவர்தம் பாரியார் திருமதி மனோன்மணி அவர்களின் அருமைப் புத்திரனாக 29/OCT/1977 ஆம் ஆண்டில் திரு.செல்வரூபன் அவர்கள் இவ் அழகிய பூமியில்  அவதரித்தார்.                                        

அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடனும் செல்வறஜனி, செல்வகரன், செல்வரதி போன்ற உடன் பிறப்புகளுடன் சேர்ந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டதுடன், திரு.திருமதி Dr.சதாசிவம்(மலேசியா Klang) கனகம்மா தம்பதிகளின் அன்பு மகள் Dr.இந்திரா  அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றிக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                               

மேலும் ரூபன் என அனைவராலும் பாசமாக அழைக்கப்படும் இவர் Jaffna college லும், உடுப்பிட்டி அமெரிக்கமிஷனிலும் தனது கல்வியை சிறப்பாக கற்று உயர்நிலை அடைந்ததுடன்  வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும்  பெறுமைசாலியும் நிறைந்தவராக  விளங்கினார்,இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் சகோதரபாசம்  கொண்டும் விளங்கினார்.  இவ்வாறு மனைவி,சகோதரங்கள்,நண்பர்கள் என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 23.06.2019 இல் 41 வயதில் பிரித்தானியாவில் உள்ள Liverpool  நகரில் இறைபதம் அடைந்தார் அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

"உடுப்பிட்டி மண்ணின்   
......உன்னத உறவே
கடுகளகும் மனதில்    
......துன்பம் இழையாது
சுடு சொல்   
.....ஏதும் போசாத
புன்னகை உறவே   
.....போனீரே எமை விட்டு"