Born 02 APR 1952
Died 12 OCT 2019
Mr Ganesalingam Ponnampalam
Age 67
Ganesalingam Ponnampalam 1952 - 2019 Pungudutivu 1st Ward Sri Lanka

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும், படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த புங்குடுதீவு 1ஆம் வட்டாரத்தில் 02/APR/1952 ஆம் ஆண்டில் திரு.திருமதி பொன்னம்பலம் நல்லம்மாதம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.கணேசலிங்கம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.                                     

அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் பத்மாவதி, சகுந்தலாதேவி பாலசுப்பிரமணியம், சத்தியசீலன் எனும் உடன்பிறப்புடன் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், திரு.திருமதி சுப்பிரமணியம் ராஜலக்சுமி தம்பதிகளின் அன்பு மகளான கனகேஸ்வரி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தார்.                                              

இவர்கள் இருவரின் வாழ்க்கையின் பயனாக சுதாகரன், சுதர்ஷன், சுமன், சத்தியன், ஜேசுதாசன், சஞ்சன் எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து கமலாஷினி, சுதாஷினி, நோரா, சுகன்யா, கீதகரணி என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து, பிரனேஷ்-ஜெரேஷியா, தந்தினி-ப்ரசீலா, அஜீவன், அருஜன், ஆரோன்-றொம்மேலோ, நித்தியன், ப்ரீத்தி, வேந்தன், அஞ்சலி போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                               

மேலும் இவர் கடின உழைப்பாளியாக விளங்கியதுடன், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தது மட்டுமல்லாது இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார்.                                             

இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 12.10.2019 இல் 67 வயதில் ஜேர்மனியில் உள்ள Ravensburg நகரில் இறையடி எய்தினார். அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.