2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 JUN 1930
இறப்பு 05 JAN 2019
அமரர் கார்திகேசு கதிரவேல்
ஆசிரியர், கணக்காளர்- S.K. Nathan & company, 4th Cross Street, Colombo
இறந்த வயது 88
கார்திகேசு கதிரவேல் 1930 - 2019 புங்குடுதீவு 10ம் வட்டாரம் இலங்கை
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா woodbridge ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கார்திகேசு கதிரவேல் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புத் தெய்வமே!
ஆண்டு இரண்டு கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள்
அன்பை கொடுக்க பல சொந்தங்கள் இருந்தும்
இல்லை அப்பா உங்களைப் போல் அன்பு கொள்ள
எங்களை சுற்றி ஆயிரம் உறவுகள்- இருந்தும்
யார் நிரப்புவார் உங்கள் வெற்றிடத்தை?

நீங்கள் பிரிந்து இரண்டு வருடம்- இன்றும்
தவிக்கிறோம் நீங்கள் இல்லாமல்
காலங்கள் பல ஓடினாலும்- குறையவில்லை
கண்ணீர் துளிகள் உங்களை நினைக்கையில்
மாற்றங்கள் பல வந்தாலும்- மறைந்திடுமோ
நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையும் உங்கள் வார்த்தைகளும்,
உள் நெஞ்சில் ஆழ்கடல் அன்பால்,
எங்களை வழிநடத்தியவர் நீங்கள்
என்றும் நீங்களே எங்கள் வழிகாட்டி
என்றும் உங்கள் நினைவுகளுடன் நாங்கள்!

இம் மண்ணைவிட்டு நீங்கள் பிரிந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றும் நிலைத்து நிற்கும் உங்கள் ஆத்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்

உங்கள் பிரிவால் துயரும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்  



தகவல்: குடும்பத்தினர்

Photos

View Similar profiles