1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 17 JUL 1954
உதிர்வு 10 AUG 2019
அமரர் நித்தியானந்தராசா சிறிகாந்தன்
இறந்த வயது 65
நித்தியானந்தராசா சிறிகாந்தன் 1954 - 2019 சங்கானை இலங்கை
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அராலிவீதி சங்கானையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை நிரந்தர வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த நித்தியானந்தராசா சிறிகாந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம்மை விட்டு பிரிந்து
ஓராண்டு கடந்தாலும்
ஓராயிரம் கதைகள்
ஒலித்துக் கொண்டே தான்
மரணம் மெளனிக்கவில்லை
மெளனம் தான் மரணித்துவிட்டது
மனம் மெளனிக்கவில்லை
மெளனமே மனமாகின்றது

ஓசைபோடும் ஒலிகளுக்கிடையில்
ஆர்பரிக்கும் அலைகளுக்கிடையில்
கூடி கும்மாளம் போடும் குள்ளநரி
கூட்டங்களுக்கிடையில்
கடந்து சென்ற பாதைகளையும்
வாழ்ந்து போன மெளனங்களையும்
அதிசயமே ஆச்சரியப்படுகின்றது

வெறுப்பிருந்தும் பொறுமையிழக்கவில்லை
வெதும்பிக்கொண்ட போதும் மெளனம் இழக்கவில்லை
சச்சரவு இருந்தபோதும்  சலனப்படவில்லை
சத்தம் போட்டபோதும் சண்டையிடவில்லை

வாடிய முகத்திலும் தளர்ந்த மனத்திலும்
ஓராயிரம் கதை சொல்ல எத்தனித்தபோதும்
ஓராண்டாய் மெளனித்த மரணம்
மரணம் வரமுன்னே மெளனித்த மனமும்
மெளனம் கலையும் போதே
மரணித்த மெளனமும்
மெளனமாகவே மரணித்துவிட்ட
கடந்து சென்ற பாதைகளையும்
வாழ்ந்துபோன மெளனங்களையும்
அதிசயமே ஆச்சரியப்படுகின்றது

முட்டி மோதிக்கொள்ளும் முகங்கள்
கதைபேசும் வல்லவர்கள்
சோதனையான காலங்கள்
பாசமில்லா சகோதரர்கள்
மெளனமாக சிரித்து மரிதையாக விலகி
கடந்து சென்ற பாதைகளையும்
வாழ்ந்துபோன மெளனங்களையும்
அதிசயமே ஆச்சரியப்படுகின்றது

அளவில்லாத அன்பு இருக்கட்டும்- நாம்
அனைவரும் நம்பிக்கை இருக்கட்டும்
இதயம் நிறைந்தவர்களாக
ஆத்மா சாந்தி அடையுங்கள்
இறைவனை வேண்டுகின்றோம்.

அன்புடன் பிள்ளைகள்..

அன்னாரின் முதலாம் ஆண்டு ஆத்மசாந்தி கிரியை 30-07-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 அவரது இல்லத்தில் நடைபெற இருப்பதால் தாங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.  

தகவல்: மனைவி, குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

View Similar profiles