Born 21 AUG 1968
Died 10 AUG 2019
Mr Balasubramaniyam Manoharan (மோகன்)
Age 50
Balasubramaniyam Manoharan 1968 - 2019 Thirunelveli Sri Lanka

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் மக்கள் செறிந்து வாழும் பகுதியும்,படித்த மக்களை கொண்டதும்,பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியும்,மரக்கறித்தோட்டம்,வீட்டுத்தோட்டம் என அழகு நிறைந்த திருநெல்வேலியில் 21/Aug/1968 இல் திரு.திருமதி பாலசுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனாக திரு.மனோகரன்  அவர்கள்  இவ் அழகு நிறைந்த ஊரில் மழலையாக அவதரித்தார்.                                         

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் ரவீந்திரன், மகாதேவி, ரகுநாதன், வசந்தகுமார், ஸ்ரீதரன், மகேஸ்வரன் போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் தெல்லிப்பளை திரு.திருமதி பத்மநாதன் புஸ்பலீலா தம்பதிகளின் அன்பு மகள் லோஜனா எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து  மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து ஜெனாகரன், கேளினி எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து  வந்தார்.                                               

மேலும் மோகன் என அழைக்கப்படுவதுடன் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் அறிவும் நிறைந்தவராக விளங்கியதுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கிய இவர் சகோதரபாசம்  கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 10.08.2019 இல் 50 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறையடி எய்தினார், அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.

”திருநெல்வேலி மண்ணின்  திருப் புதல்வனே
வரும் பகை அனைத்தையும்   வாழ்வில் வென்று
கருத்தாக பேசி  கடமை செய்து
வருந்தி அழ  பிரிந்து சென்றீரே”