1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 04 MAY 1929
ஆண்டவன் அடியில் 01 MAR 2020
அமரர் ராசு ஞானம்மா
இறந்த வயது 90
ராசு ஞானம்மா 1929 - 2020 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கச்சேரி ஆசீர்வாதப்பர் வீதியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ராசு ஞானம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

யோவான் 14:6 TAOVBSI
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்;
என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்த போது கண்முன்னே
அம்மாவின் பாச நினைவுகள் தான்

தாங்கிப் பிடிக்கின்ற மனதை
எண்ணங்களும் செயல்களும் நீங்களாக
கண்களை மூடி காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகின்றோம் கணப்பொழுதும்

ஆண்டு ஒன்று சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்

நினைவுகள் தான் எம்மிடம்
நிஜத்தில் ஆண்டவன் சன்னிதானத்தில்
ஆறாத் துயிலில் கலந்திருக்கும் உங்கள் 
பாதங்களில் கண்ணீர்த் துளிகளாலே
ஆராதனை செய்கின்றோம் அம்மா

உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள்,
சகோதரிகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்..

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

View Similar profiles