பிரசுரிப்பு Contact Publisher
2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 AUG 1966
இறப்பு 28 NOV 2018
அமரர் துரைசிங்கம் மகேந்திரன்
துரைசிங்கம் மகேந்திரன் 1966 - 2018 நயினாதீவு இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த துரைசிங்கம் மகேந்திரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தீரே- நீங்கள்
வானடைந்து ஆண்டிரண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் மானிடனாய்
பிறந்ததன் மகிமைதனை தானுணர்ந்து
ஊனினை உருக்கி எமக்காய் உழைத்து- நீங்கள்
உடலோடு உயிரையும் எமக்கே அர்ப்பணித்தீரே!

உப்பிட்டாள் உத்தமியை உயிருக்குயிராய் நேசித்து
இரு மகவினை அன்போடு பெற்றெடுத்து தகைமையுடன்
வாழவைத்து செப்பரிய பணிகளை செவ்வனுறச் செய்த- நீங்கள்
ஒப்பரிய தெய்வமே! எம்மை விட்டு சென்றதெங்கே!

உங்கள் பிரிவை ஆற்றவும் முடியவில்லை ஆறவும் முடியவில்லை
கண்ணோடு இமையானீர் அன்று எம் கண்ணீரின் கதையானீர் இன்று
விழிபோல் காக்குந்தெய்வமாய் இருந்தீர்கள் அன்று
நீர் சிந்தும் விழியானோம் நாம் இன்று
பூவுலகில் சொர்க்கத்தை எமக்குத் தந்தீர் அன்று
விண்ணுலகில் சொர்ப்பணமாய் ஏன் சென்றீர் இன்று

தந்தையே! எங்களையும் அம்மாவையும் யாரிடத்தில் விட்டீர்கள்- நீங்கள்
தெரிகிறீர்கள் பார்க்கும் இடமெல்லாம்
தோள்மீதும் மார்மீதும் தூக்கி வளர்த்த உங்களுக்கு
மாரடைத்து சடுதியில் சரித்திரமானீர்கள் எமக்கு தெய்வமானீர்கள்!

எம் உணர்வுகள் நிழற்குடையாய் எம்மை நித்தமும் காத்தீர்கள்
உங்கள் பிரிவை ஏற்க மறுக்குது விழி மூட மறுக்குது
விதித்ததோர் விதியால் விண்ணகம் சென்றீர்கள்- இவ்
விதியின் சதியினை எம்மால் பொறுக்கமுடியுமோ!
கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும்- எம்
முன்னே உங்கள் முகம் எக்காலமும் எம்மோடு உயிர் வாழும்

வாழுங்காலத்தில் எம் வழிகாட்டி நீங்கள்- எமக்கு
வானுலகில் இருந்தும் வழிகாட்டுங்கள்
எம் குடும்பத்தில் ஒருவராய் மீண்டும் வாருங்கள்- நாங்கள்
உங்கள் நினைவோடு என்றும் காத்திருப்போம்!

அன்பு மனைவி- கேதாரகெளரி துரைசிங்கம்
பிள்ளைகள்- மயூரன், மதுஷன்


தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos