- No recent search...

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தில்லையம்பலம் சிவகொழுந்து அவர்களின் 35ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே!
அம்மா முப்பத்தைந்து ஆண்டுகள்
உங்களின் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே!
கனவுகள் பல கண்டு
ஆசிகளுடன் எம்மைப் பிரிந்த
ஏம் இனிய அன்னையே!
வருடங்கள் பல உருண்டோடினாலும்- உன்
உருவம் கண்ணிலே நிற்குதம்மா
எத்தனை உறவுகள் இருந்தபோதிலும்
அம்மா என்ற உறவுக்கு ஈடாகாது!
உங்களோடு வாழ்ந்த அந்த காலங்கள்
எல்லாம் பொற் காலங்கள் தான்!
ஆண்டு பல உருண்டு சென்றாலும்
உங்களை எங்கள் உயிர் உள்ளவரை
தெய்வமாக பூசிப்போம்.!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details