Born 25 DEC 1953
Died 17 OCT 2019
Mr Somasuntharam Theiventhira
Age 65
Somasuntharam Theiventhira 1953 - 2019 Vidathaltivu Sri Lanka

வாழ்க்கை வரலாறு

மன்னார் விடத்தல்தீவில் 25/DEC/1953 இல் சோமசுந்தரம் மனோன்மணி தம்பதிகளுக்கு பாசமிகு மகனாக தெய்வேந்திரா அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார். தவமணிதேவி, ஜெகதீஸ்வரி, பெரியதம்பி, பாலேந்திரா, விஸ்வேந்திரா, நாகேந்திரா, தேவி, கனகேந்திரா,ரவீந்திரா, சாயானிதேவி, ராசேந்திரா, மாலினிதேவி எனும் சகோதரங்களோடு குறும்புகள் செய்து இனிமையாக வளர்ந்தார்.

அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவரானதும் இராமசேது மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளான சிவகொழுந்து அவர்களைத் திருமணம் முடித்து சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக,நந்தபாலன், சிரோஜன் ஆகிய பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து, றேனுகா அவர்களைத் திருமணம் முடித்து வைத்து, நலிசா எனும் பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

வாழ்வில் அன்பும் கருணையும் கொண்டவரான இவர், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். மேலும் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்து உதவிகள் செய்து குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.

இவ்வாறு மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள், மருமக்கள், பேரப்பிள்ளை, உற்றார், உறவினர்கள் என சந்தோசமாக வாழ்ந்து வந்த இவர் 17.10.2019 இல் 65 வயதில் ஜேர்மனியில் உள்ள Ratingen நகரில் காலமானார்.

அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம்.