1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 JUN 1970
இறப்பு 09 APR 2020
அமரர் சிவலிங்கம் வசந்தன்
இறந்த வயது 49
சிவலிங்கம் வசந்தன் 1970 - 2020 ஏழாலை இலங்கை
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 28.03.2021

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவலிங்கம் வசந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு ஆயினும் ஆறாத எம் துயரங்கள்
வலிகளை சுமர்ந்து தனிமையிலே அழுகின்றோம்
நினைவுகள் வருகையில் நிலைகுலைந்து நிற்கின்றோம்
என் ஆயுட்காலம் முழுவதுமாய் உன்னோடு
செலவழிக்க எண்ணினேன் இன்றோ நீர்
இல்லாமல் என் ஒவ்வொரு நொடியும்
கண்ணீரில் கடக்கின்றது!

கண்களில் எம்மை சுமர்ந்தீர் கணப்பொழுதில்
எம்மை விட்டு கரைந்து விட்டீர் காற்றில்
இந்த மண்ணில் உன்னை போல் யார் வருவார்
எம்துயர் போக்க எண்ணிப் பதைக்கின்றோம்
விண்ணில் தேடுகின்றோம் 

எத்தனை ஆண்டுகள் பல கடந்தாலும்
நாம் இப் பூமியில் வாழும் வரை உன் நினைவுகள்
எம்மை விட்டு அகலாமல் வாட்டி வதைக்கும்மய்யா!
உன் மதிமுகமும் உன் கணீர் என்ற குரலும்
எம் இதயத்தை புரட்டிப் போடுதய்யா!

உன் ஆத்மா சாந்தியடைய எமது கண்ணீரை
உனக்கு காணிக்கையாய்ச் சமர்ப்பித்து
இறைவனை வேண்டுகின்றோம்!!!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

View Similar profiles