Born 15 SEP 1928
Died 10 JUL 2019
Mr Gerard Majella Soosaipillai
ஓய்வுபெற்ற ஆசிரியர்
Age 90
Gerard Majella Soosaipillai 1928 - 2019 Puloly Sri Lanka

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த புலோலியில் 15/SEP/1928 இல் திரு திருமதி சூசைப்பிள்ளை கத்தரினம்மா  தம்பதிகளின் அன்பு மகன் திரு.ஜெராட் மஜெல்லா  அவர்கள்  இவ் அழகு நிறைந்த இடத்தில்   மழலையாக அவதரித்தார்.                                         

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் அந்தோனிப்பிள்ளை, லூர்தம்மா மற்றும் பிரான்சிஸ் போல் போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும், யாழ்.பெரிய கோவில் உபதேசியார் வின்சன் திரேசம்மா தம்பதிகளின் மகள் மேரிறோசலின்(ஜெயமணி) எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து  மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து யோசப்பின் நொயலின், திரேசா நீலியா போன்ற அழகிய பிள்ளைகளைப் பெற்று வளர்த்து அல்பிறட் யோசப் இம்மானுவேல், பென் கொன்சன்ரைன் விஜயரட்ணம் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து டெனிசன், டிவினியா, கெனோசன், ஆரோன், டயன்றா, ஜெரோன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து  வந்தார்.                                           

மேலும் ஆசிரியராக கடமை ஆற்றி ஓய்வு அடைந்த இவர் அனைவருடனும் நகைச்சுவையாக பேசுவதுடன் அன்பான அரவணைப்பால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும்  கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக  விளங்கினார்,இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 10.07.2019 இல் 90 வயதில் அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகரில் இறையடி எய்தினார், அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

கல்வி புகட்டிய உயர்     
குருவே
பல்கிப் பெருகிய பாச     
உறவே
அன்பாய் பழகிய அறிவுக்     
கடலே
அன்னை போல் மனதில்    
உயர்ந்து
கண்ணீர் தந்தீர் பிரிவில்    
ஆழ்த்தி