- No recent search...

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேந்திரராஜா ஆறுமுகம் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐயா நின்நிழலில் நாம் இருந்தோம்
அன்பால் பிணைத்திருந்தாய் ஐயா
ஆண்டுகள் இரண்டு ஓடிமறைந்தாலும்
என்றும் உங்கள் நினைவுகள் அகலாது
எப்பொழுதும் எம்மனதில் நிறைந்திருக்கும் ஐயாவே
அழகிய உங்கள் சிரிப்பெங்கே
இனிமையான பேச்சுமெங்கே
காணத்துடிக்கிறது எம்மனம்
தேடுகிறோம் காணவில்லை
சீர் சிறப்பாய் எமை வளர்த்து வாழவைத்த தந்தையே
எம்வழியை அமைத்து விட்டு
எமை விட்டு பிரிந்தது ஏனோ?
எண்ணிய பொழுதெல்லாம் கண்ணில்
நீர் கசிகிறதே குடும்ப ஒளி விளக்கே
எங்கே சென்றாய் உணர்வால் உள்ளத்தால்
எம்மோடு வாழும் தெய்வமாகி
ஒளியாகி எமக்கெல்லாம் வழியாகி
எம் இதயங்களில் வாழ்கின்றீர்
We missed you uncle. RIP