Born 12 FEB 1965
Died 07 AUG 2019
Mr Vigneswaralingam Tharmalingam
Age 54
Vigneswaralingam Tharmalingam 1965 - 2019 Mandaitivu Sri Lanka

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும்,படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த மண்டைதீவில் 12/FEB/1965 இல் திரு.திருமதி தர்மலிங்கம் சரஸ்வதியம்மா தம்பதிகளின் அன்பு மகனாக திரு.விக்கினேஸ்வரலிங்கம் அவர்கள்  இவ் அழகு நிறைந்த தீவில் மழலையாக அவதரித்தார்.                                         

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் நடேஸ்வரலிங்கம், யோகேஸ்வரலிங்கம், ராஜேஸ்வரலிங்கம், லோகேஸ்வரி  மற்றும் ஈஸ்வரலிங்கம்,பாலரத்தினம் போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி கணேசபிள்ளை மீனலோசினி தம்பதிகளின் அன்பு மகள் மதிவதனி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து  மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து தர்ஷா, கஜிதா, தனுஷா, நிலக்ஷன், வினோஷன் எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து  வந்தார்.                                               

மேலும் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும்  பொறுமைசாலியும் அறிவும் நிறைந்தவராக விளங்கியதுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கிய இவர் சகோதரபாசம்  கொண்டும் விளங்கினார்.இவ்வாறு மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 07.08.2019 இல் 54 வயதில் பிரான்ஸ்ஸில் இறையடி எய்தினார், அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

விடியலில் பூத்த பூவே
வடிவெனும் கற்பூர தீபமே
நொடிப் பொழுதும் எமை மறவாத
கடிமனமற்ற காந்தல் மலரே
அடிமனதை  ரணமாக்கி 
மடிந்தீரே எம் மகானே