- No recent search...

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை சொர்ணம்மா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள் ஐந்து கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்....
உலகமும் நிஜமில்லை, உறவுகளும் நியமில்லை
என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்....
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண.....
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி..! சாந்தி....! சாந்தி...!
உங்கள் பிரிவால் துயருறும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.....