மரண அறிவித்தல்
மண்ணில் 10 JUL 1950
விண்ணில் 21 MAY 2020
திரு சின்னத்தம்பி இராஜகுலேந்திரன்
முன்னாள் குகன் ஒயில் ஸ்ரோஸ் முகாமையாளர், நியு கல்யாணி ஸ்ரோஸ், சிறி கல்யாணி ஸ்ரோஸ் பங்காளர், காஸ் வெர்க்ஸ் ஸ்ரிட் சேகர் சன்ஸ் போதிராஜா மாவத்தை முகாமையாளர்
வயது 69
சின்னத்தம்பி இராஜகுலேந்திரன் 1950 - 2020 வேலணை மேற்கு இலங்கை
Tribute 27 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இராஜகுலேந்திரன் அவர்கள் 21-05-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தர்மலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற சண்முகலிங்கம், கண்ணம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பூமணிதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பாலேந்திரன் அவர்களின் அருமைச் சகோதரரும்,

புஸ்பவதி, தவமணி, காலஞ்சென்றவர்களான செந்தில்மணி, ரகுநாதன் மற்றும் மகேஸ்வரி, காலஞ்சென்ற ஸ்ரீநிவாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கனகநாயகம் பிள்ளை, சிவராஜா, யமுனா, சந்திரன் ஆகியோரின் அன்புச் சகலரும்,

கஜேந்தினி, கஜானன், சிவதர்சன், தர்சிகா, அனோஜன், ஆருஜன், அற்சயன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

இந்திராதேவி, சுலோஜனா, ஜெயராஜன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தினேஸ்குமார், பிரதீஸ்குமார், சதீஸ்குமார், சுரேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2020 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பு பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பூமணிதேவி(மனைவி)

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

View Similar profiles