Born 28 JUL 1942
Died 10 SEP 2019
Mrs Kamalapoorany Shanmuganathan (கமலம்)
Kamalapoorany Shanmuganathan 1942 - 2019 Thirunelveli Sri Lanka

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள இடமும் மக்கள் செறிந்து வாழும் பகுதியும், பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடமும் கல்வி அறிவு கூடியவர்கள் சூழ்ந்துள்ள அழகிய திருநெல்வேலியில்  28/JUL/1942 இல் திரு.திருமதி சின்னத்துரை செல்வம் தம்பதிகளின் அன்பு கொண்ட மகளாய் கமலபூரணி(கமலம்) அவர்கள்  இவ் அவனியில் வந்துதிர்த்தார்.                            

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி கந்தையா மனோன்மணி தம்பதிகளின் அறிவு நிறைந்த மகனான சண்முகநாதன் எனும் அன்புள்ளம் கொண்டவரை திருமணம் முடித்து சந்தோஷமாக  வாழ்ந்ததன் பயனாக சதீஷ்குமார், விஜயகுமார் எனும் அன்புப் பிள்ளைகள் மற்றும் சதூசா, தனோஜன், டனோசன், சாயிஷ், பிரவீன், மீரா, தர்சிகா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                              

மேலும் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும்  பெறுமைசாலியும் நிறைந்தவராக  விளங்கினார்.                                              

இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளை, உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த  இவர் 10.09.2019 இல் 77 வயதில் கனடாவில் உள்ள Scarborough நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.     

"கண்ணின் மணியே
..............கருனை ஒளியே
மண்ணில் வாழ்ந்த
..............மாசற்ற ஜீவனே
எண்ணம் சிறக்க
..............எளிமையாக வாழ்ந்த
வண்ண மயிலே
..............வாழைக் கனியே
நின்னை நினைத்து
.............நித்தம் அழுகிறோம்"