மரண அறிவித்தல்
மண்ணில் 27 APR 1936
விண்ணில் 13 APR 2019
திரு ஐயாத்துரை செல்வராசா
வயது 82
ஐயாத்துரை செல்வராசா 1936 - 2019 இடைக்காடு இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை செல்வராசா அவர்கள் 13-04-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, செங்கமலம் தம்பதியின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா, நாகம்மா தம்பதியின் அன்பு மருமகனும்,

அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr.கோகுலேந்திரா, கருணாகரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகேந்திரன், சிவகாமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சிவராசா, தேவராசா, செல்வராணி, கமலராணி, சாரதாதேவி, நவரத்தினராசா, ஜெயரத்னராசா, குணரத்னராசா, ஜமுனாராணி, நித்தியானந்தராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மனோரஞ்சிதம், காலஞ்சென்ற நேசமலர், ராஜேந்திரன், அருமைத்துரை, சசீலாதேவி, குகானந்தி, சக்திதாசன், மகாலிங்கம், இந்திரா, காலஞ்சென்ற நடராஜா, விமலாம்பிகை, காலஞ்சென்ற பாலச்சந்திரன், சாரதாம்பிகை, திருவாதரன், நிர்மலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிராமி, அபிஷா, வர்ஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 08:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 15-04-2019 திங்கட்கிழமை அன்று  மு.ப 11:00 மணிமுதல் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கோகுலேந்திரா
கருணாகரி
கருணாகரி

Summary

Photos

No Photos