Born 25 JAN 1936
Died 04 OCT 2019
Mr Vijayaratnam Kandiah
Vijayaratnam Kandiah 1936 - 2019 Alaveddi Sri Lanka

வாழ்க்கை வரலாறு

ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவரும், அன்பு செலுத்துவதில் எல்லையற்றவருமான விஜயரட்ணம் கந்தையா அவர்களின் வாழ்க்கை வரலாறிது...

ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தில் கல்வியறிவு கூடியதுமான அழகிய அளவெட்டியில் கந்தையா அன்னமுத்து தம்பதிகளுக்கு பாசமிகு மகனாக விஜயரட்ணம் அவர்கள் 25/JAN/1936 இல் பிறந்தார். சபாரத்தினம், தனலக்சுமி  கமலாலக்சுமி, சொர்ணலக்சுமி போன்ற சகோதரங்களோடு ஓடி ஆடி விளையாடி வளர்ந்த இவர், பள்ளிக்கல்வியோடு கல்லூரியிலும் படித்தவர்.

படித்து முடித்தவுடன் நல்ல வேலைக்குச் செல்லத்தொடங்கிய இவர், திருமண வயதை எட்டியதும் சுப்பிரமணியம் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளான கணேஸ்வரி அவர்களைத் திருமணம் முடித்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழத்தொடங்கினார். இல்லற வாழ்வை இனிமையாக வாழ்ந்ததன் பயனாக மதிவதனி, கெளதமி, பிரதாபன் போன்ற செல்வங்களை பெற்று நல்ல சிந்தனைகளை போதனைகளாகக் கூறி வளர்த்து, அவர்களை நல்ல முறையில் படிக்கவைத்து வாழ்க்கையில் உயர்த்தினார். தன் பிள்ளைகளுக்குத் தான் செய்ய வேண்டிய கடமைகளுள் முக்கியமானதான அவர்களின் திருமணத்தை நல்ல முறையில் செய்ய விரும்பிய இவர், அவர்களுக்கு வாழ்வில் நல்ல வாழ்க்கை துணைகளாக மனோகரன், தெய்வேந்திரன் ஆகியோர்களைத் தேர்ந்தெடுத்து மணமுடித்து வைத்தார்.

2006 இல் கனடாவிற்கு குடிபெயர்ந்து வாழ்த்தொடங்கிய இவர், ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டதுடன் திருவாசகம் போன்ற அரிய ஆன்மிக நூல்களை தனது கேள்வி ஞானத்தின் மூலம் கற்று, அதனை பிறருக்கு கற்றுக்கொடுத்து, வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் அங்குள்ள முத்து விநாயகர் கோயிலில் திருவாசகத்தை ஓதி வந்தார்.

பாடல்களை ராகமாக பாடுவதில் வல்லவராக திகழ்ந்ததுடன், கவிதை, கதை என இரண்டையும் முறையே தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் மிகுந்த ஆர்வத்தோடு எழுதினார். வீட்டில் தினசரி நாளிதழ்களை படிப்பதையும், செய்திகளை பார்ப்பதையும் தனது அன்றாட பொழுதுபோக்காக கொண்டிருந்த இவர், தனது மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறாவினர்கள், நண்பர்கள் என அனைவரோடும் நன்றாக பேசிப்பழகி, அவர்களிடம் பாசம் செலுத்து வந்தார்.

இப்புவியில் பெருவாழ்வை வாழ்ந்து முடித்த இவர், இந்த உலகத்தை விட்டு 04.10.2019 இல் தனது 83 வயதில் கனடாவில் உள்ள Toronto நகரில் மண்ணுலகம் புறப்பட்டார்.

“அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திப்போம்”