Born 02 AUG 1930
Died 10 AUG 2019
Mr Thambipillai Mahesan
Age 89
Thambipillai Mahesan 1930 - 2019 Malaysia Malaysia

வாழ்க்கை வரலாறு

தென் கிழக்காசியாவில் முக்கியமான நாடும் மலாக்கா நீரிணைக்கு அருகில் உள்ளதும் கப்பல் போக்குவரத்தின் முக்கிய வலயமாக விளங்கும் பகுதியில் சிறப்பும் சகல வளங்களைக் கொண்டதுமான மலேசியாவில் 02/Aug/1930 இல் திரு.திருமதி சின்னத்தம்பி தம்பிப்பிள்ளை சந்தனம் தம்பதிகளின் அன்பு மகனாக திரு.மகேசன் அவர்கள் ஞானாம்பிகை, சர்வேஸ்வரி, சொர்ணகாந்தி என்பவர்களின் சகோதரமாக இவ் அழகு நிறைந்த நாட்டில் மழலையாக அவதரித்தார்.                                         

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர்  குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி ஆறுமுகம் வைத்திலிங்கம் பவளம்மா தம்பதிகளின் அன்பு மகள் விஜயதேவி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து  மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து ஜானகி, பகீரதன், குமுதினி, மாதவன், மைதிலி எனும் அழகிய பிள்ளையைப் பெற்று வளர்த்து Dr.சத்தியசீலன், ஸ்ரீரங்கநாதன், ஜெயநேசன், ரவிகலா, விஜிதா போன்றவர்களைத் திருமணம் முடித்து வைத்து Dr.சிந்துஜா, வருண், திவ்யா, ராகுல், கிருஷா, ஐஷ்வரன், அதிஷ்வரன், ரோஹித், சஞ்சய், ராகவ், ரிஷானா, Dr.Geoff Bouvier, m.Ramanan போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து  வந்தார்.                                              

மேலும் சங்குவேலி,மானிப்பாய்,உரும்பிராய் போன்ற இடங்களில் வாழ்ந்ததுடன் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும்  கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும்  பெறுமைசாலியும் நிறைந்தவராக  விளங்கினார், இவ்வாறு மனைவி, பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 10.08.2019 இல் 89 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறையடி எய்தினார், அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

தென் கிழக்கு முத்தே
தன் மானச் சொத்தே
என் நாளும் முயன்ற வித்தே
உன் உறவை உயர்த்தி அன்பை விதைத்து
தன் மானம் காத்து தரணி போற்றி
சின்னச் சிரிப்புடன் வாழ்ந்து
பின்னிய உறவை பிரிந்தீரே