பிரசுரிப்பு Contact Publisher
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 30 SEP 1967
இறைவன் அடியில் 27 MAR 2018
அமரர் பாஸ்கரன் சஜாஜினி (ராஜி)
இறந்த வயது 50
பாஸ்கரன் சஜாஜினி 1967 - 2018 சண்டிலிப்பாய் இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாஸ்கரன் சஜாஜினி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

கணவன் மனக்குமுறல்

என்னவளே என் இனியவளே!
உன்னோடு நான் வாழ்ந்த வாழ்க்கை
என் வாழ்வில் நான் இழந்த இந்த இழப்பை 
இறைவன்  என் வாழ்நாள் முழுவதும்
தாங்க முடியாமல் செய்துவிட்டான்!

தனி மரமாக விட்டு ஏன் அவசரமாக சென்றுவிட்டாய்
இவ்வளவு தான் நம் வாழ்க்கை என்று
காலம் நினைத்துவிட்டதா?

காலங்கள் உருண்டு போனாலும்
கண்முன்னே நிழலாகும் உன் நினைவுகள்
ஒரு போதும் என்னை விட்டு அகலாது!

எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உன் நிழலின் நிஜத்தை தேடி
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்!


மகளின் மனக்குமுறல்

அம்மா என்ற சொல்லின் சூட்சுமம் நீ
குடும்பத் தலைவியாய் என்னை வழிகாட்டியாய்
நீ இருந்தாய் அம்மா!
நான் எங்கே எப்படி வாழ்ந்தாலும்- நீயே
என் வாழ்வின் ஒளி விளக்கு!

பாசத்தின் உறைவிடம் அம்மா நீ நல்ல நேசத்தின்
இருப்பிடம் நீ கருணையின் பிறப்பிடம் நீ
என்னை அன்பாய் ஆட்சி செய்தவள் நீ
ஓராண்டு ஓடி ஒழிந்தது அம்மா
நித்தமும் உம் நினைவுகள் என் மனதில் அம்மா

ஆறுதல் கூற ஆயிரம் வார்த்தைகள் இருந்தும் என் அம்மா குட்டி
பரிவுடன் நீ காட்டிய அன்பினை இனி எவர்தான்
எனக்கு கொடுபார் அம்மா...
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்!


அன்னாரின் துணைவியாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 16-03-2019 சனிக்கிழமை அன்று மு.ப 12:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றேன்.​

தகவல்: பாஸ்கரன்(பாபு- கணவர்), மகள்

தொடர்புகளுக்கு

வீடு

கண்ணீர் அஞ்சலிகள்

RIP BOOK United Kingdom 1 week ago
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.

Summary

Photos

No Photos