மரண அறிவித்தல்
பிறப்பு 26 APR 1939
இறப்பு 15 SEP 2020
திருமதி செல்வரட்ணம் சிவமணி
வயது 81
செல்வரட்ணம் சிவமணி 1939 - 2020 நல்லூர் இலங்கை
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் சிவமணி அவர்கள் 15-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை பூரணம்(யாழ்) தம்பதிகளின் அன்பு மகளும், யாழ். சண்டிலிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவசம்பு அன்னம் தம்பதிகளின் ஆசை மருமகளும்,

சண்டிலிப்பாயைச் சேர்ந்த செல்வரட்ணம்(இளைப்பாறிய பிரதம லிகிதர்- யாழ். மாநகரசபை) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

மங்கையகரசி(இலங்கை), புவனேஸ்வரி(லண்டன்), செல்வேந்திரா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஈஸ்வரகாந்தா(இலங்கை), குணசீலன்(லண்டன்), கலைவாணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுந்தரலிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், சோதிலிங்கம், சங்கரலிங்கம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

ராஜலட்சுமி(லண்டன்), கண்மணி(லண்டன்), சிவசோதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற தங்கரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கஜேந்திரா, நிமலேந்திரா, வாசுகி, கைலாஷ், கைலேந்திரா, அனுஷ்கா, தனேந்திரா ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,

திருமதி கையேந்திரா சாருகா அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் செம்மணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

View Similar profiles