- No recent search...

யாழ். தென்மராட்சி மந்துவிலைப் பிறப்பிடமாகவும், சுவீடனை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை திசைவீரசிங்கம் அவர்கள் 30-11-2019 சனிக்கிழமை அன்று சுவீடனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை ஆசையம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி மாணிக்கவாசகர்(நுணாவில்) தம்பதிகளின் மருமகனும்,
வள்ளிநாயகி அவர்களின் கணவரும்,
பிரபா, தனுஷன் ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை, மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, தங்கரத்தினம்(மல்லிகா) மற்றும் துரைராஜசிங்கம், ஜெயவீரசிங்கம் ஆகியோரின் சகோதரரும்,
இராஜேஸ்வரி, கணபதிப்பிள்ளை, செல்வரத்தினம், செல்வராணி, வனஜா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-12-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் சுவீடனில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அமரர் வேலாயுதபிள்ளை திசைவீரசிங்கம் நாங்கள் அறிந்த முதல், மூத்த இனவிடுதலை வீரன், தன்னலம் அற்ற செயற்பாட்டாளர், தென்மராட்சியின் வீரமைந்தன், புலம் பெயர்வின் பின் தாயகம் திரும்ப வேண்டுமென்ற ஆசை...